உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புனித வெள்ளிக்கு டாஸ்மாக் மூடக்கோரி உண்ணாவிரதம்

புனித வெள்ளிக்கு டாஸ்மாக் மூடக்கோரி உண்ணாவிரதம்

துாத்துக்குடி: புனித வெள்ளி நாளில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, மீனவ கிராம மக்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான புனித வெள்ளி நாளில் தமிழகம் முழுதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே வீரபாண்டியபட்டினம் ஊர் நல கமிட்டி சார்பில், நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.பாத்திமா ஆலய வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஊர் நலக் கமிட்டி தலைவர் பெயிற்றன் வீ.ராயர் தலைமை தாங்கினார். வீரபாண்டியன்பட்டினம் சர்ச் பங்குதந்தை அலாய்சியஸ் அடிகளார், திருநெல்வேலி - துாத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை இயக்குனர் ஜெயந்தன் சிறப்புரையாற்றினர்.போராட்டத்தில், வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராம மக்கள் மட்டுமின்றி, பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களும் பங்கேற்றனர். மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 05:09

ஒட்டுமொத்தமா மூட சொல்லாம இது என்ன தவறான விதத்தில் உண்ணாவிரதம் ? தமிழகத்தில் விதவைகளை அதிகரிக்கும் டாஸ்மாக் என்று கனிமொழியே சொல்லியிருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை