உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய்; போலீசில் ஒப்படைத்த தந்தை- மகளுக்கு குவியும் பாராட்டு!

ரோட்டில் கிடந்த ஒன்றரை லட்சம் ரூபாய்; போலீசில் ஒப்படைத்த தந்தை- மகளுக்கு குவியும் பாராட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் ரோட்டில் கிடந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த தந்தை செல்வராஜ், மகள் வித்யாவை பல்வேறு தரப்பினர் வெகுவாக பாராட்டி உள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர் பெயின்டராக வேலை பார்க்கிறார். இவர் மகள் மகள் வித்யா, 28; பட்டதாரியான இவர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வருகிறார். தந்தை, மகள் இருவரும் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேக்கரியில் டீ சாப்பிட சென்றனர். அப்போது ரோட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடந்ததை இருவரும் கவனித்தனர்.யாரோ பணத்தை தவற விட்டுச்சென்றதை புரிந்து கொண்ட தந்தை மகள் இருவரும், பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க விரும்பினர். உடனடியாக அந்த பணத்தை காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று ஒப்படைத்தனர்.'பிறர் பணம் நமக்கு தேவையில்லை. நாம் உழைத்த பணம் நமக்கு போதும்' என்று செயல்பட்ட தந்தை, மகள் செயல் குறித்து உங்களது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் கமென்ட் செய்யுங்க மக்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Rajaraman Srinivasan
ஆக 30, 2025 00:15

பணத்தை தவறவிட்ட காமராஜ் 70 வயது என்பவரிடம் காவல் துறை அதிகாரிகள் பணத்தைக் கொடுத்துவிட்டதாக செய்தி வந்துள்ளது


Rajaraman Srinivasan
ஆக 29, 2025 23:59

போலீசார் விசாரித்தபோது, பேக்கரியில் டீ குடிப்பதற்காக வந்த காங்கயத்தை சேர்ந்த காமராஜ் 70 என்பவர் பையை தவற விட்டது தெரிந்தது. அவரிடம் பணத்துடன் பையை போலீசார் ஒப்படைத்ததுடன், தந்தை, மகளை மனமார பாராட்டினார்கள் என்று செய்தி வந்துள்ளது.


Selvaraj K
ஆக 25, 2025 07:57

குற்றத்துக்கு உடந்தைய போற காவல் துறையிடம் ஒப்படைத்தாள் ஊரியவரிடம் போகாது நேர்மைக்கு நல்ல காலம் இல்லை


ram
ஆக 24, 2025 22:56

vazhalga valamudan


என்றும் இந்தியன்
ஆக 24, 2025 19:17

கொடுத்தவர்கள் மிக மிக நல்லவர்கள் ஆனால் வாங்கிய டாஸ்மாக் நாட்டு ஏவல் துறை????யாரிழந்தார்களோ அவர்களிடம் செல்லுமா அந்த பணம்???எப்போது???அதற்கு கமிஷன் எவ்வளவு???


vbs manian
ஆக 24, 2025 19:05

உயர்ந்த மனிதர்கள் மாளிகையில் மட்டுமே வாழ்வதில்லை.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஆக 24, 2025 19:00

இந்த நல்லவர்கள் எல்லா நலமும் பெற்று வளத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.


Sangi Mangi
ஆக 24, 2025 18:53

நல்ல வேளை.இந்த பணம் சனியன்கள் கைகளில் கிடைக்கவில்லை, அப்படி கிடைத்து இருந்தால்...


R. SUKUMAR CHEZHIAN
ஆக 24, 2025 17:38

திராவிட கும்பல்கள் ஆட்சி செய்தும் தமிழகம் ஓர் அளவுக்கு சீராக இருப்பதற்கு இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் தான் அதனால் தான் நாட்டில் மழை பொழிகிறது. கடவுள் இவர்களை ஆசிர்வாதித்து அனைத்து செல்வங்களை வழங்க பிரார்த்திக்கிறேன்.


T.sthivinayagam
ஆக 24, 2025 16:35

கட்சிக்கு கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கோடிகணக்கில் பணம் வாங்கும் இந்த காலத்தில் இப்படியும் நடப்பதால் தான் மழை பெய்து வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை