வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சர்க்கரை எங்கே ???? எறும்புகள் சாப்பிட்டுவிட்டன ....... சரி .... சாக்குப்பைகள் எங்கே ???? கரையான்கள் தின்றுவிட்டன ......
சென்னை: கோப்புகள், ஆவணங்கள் அனைத்தும், 'மிக்ஜாம்' புயலில் காணாமல் போனதாக கூறிய சார் - பதிவாளர் பதிலால், தகவல் ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது.சென்னை, மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் புகழ்பாலன். இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2023 ஏப்., மாதம் வழங்கிய மனுவில், குறிப்பிட்ட பத்திர எண் ரத்து செய்ததற்கான காரணம் உள்ளிட்ட நான்கு இனங்களில் தகவல்களை கோரியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ricfk4ku&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.அதில், மனுதாரர் மனுக்களுக்கு, அப்போதைய பொது தகவல் அலுவலரும், தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட பதிவாளருமான ரஜினிகாந்த் மற்றும் அப்போதைய மேல்முறையீட்டு அலுவலரும், தற்போதைய திண்டுக்கல் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவருமான மகேஷ் ஆகியோர், எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.எதுவும் இல்லை எனவே, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை, 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையில், மனுதாரர் கூறுகையில், 'கடந்த 2021 செப்., மாதம் மற்றும் 2022 மார்ச் மாதம் அளித்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்கள், இதுவரை அளிக்கப்படவில்லை' என்றார்.அதற்கு, பொதுத் தகவல் அலுவலர் கூறிய பதிலில், 'மனுதாரர் கோரிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள், மிக்ஜாம் புயலின்போது முழுமையாக காணாமல் போய்விட்டன. அலுவலகத்தில் கோப்புகள் எதுவும் பராமரிப்பில் இல்லை' என தெரிவித்தார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் குறிப்பிட்ட தடங்கல் மனுக்களின் நகல்களை, மீண்டும் பொதுத்தகவல் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.அவகாசம் அவற்றை பெற்றுக்கொண்ட பின், சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை, மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.அதேபோல், தற்போதைய பொதுத்தகவல் அலுவலர், மேற்சொன்ன அலுவலர்கள் ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரிடம், காரண விளக்கத்தைப் பெற்று, அடுத்த மாதம் 6ம் தேதிக்குள் ஆணையத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சர்க்கரை எங்கே ???? எறும்புகள் சாப்பிட்டுவிட்டன ....... சரி .... சாக்குப்பைகள் எங்கே ???? கரையான்கள் தின்றுவிட்டன ......