உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று(ஜன.,22) வெளியிடப்பட்டது. அதன் படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348ஆக உள்ளது. ஆண்களை விட 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நிருபர்களுக்கு சத்யபிரதா சாகு அளித்த பேட்டி: இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் துறையின் இணையதளத்திலும் பார்வையிடலாம்.வாக்காளர் பட்டியலின் இரண்டு நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும் வாக்காளர்களுக்கு, பதிவுத் தபாலில் வாக்காளர் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DVRR
ஜன 22, 2024 17:03

6.18 கோடி வாக்காளர்கள்???அப்போ திமுக விற்கு செலவு ரூ 2000/ஒரு வோட்டுக்கு??3.09 கோடி வாக்காளர்கள் (பாதி பேர் தான் திமுகவிற்கு ஒட்டு போடுவார்கள் என்று எடுத்துக்கொண்டால்) = ரூ 6,180 கோடி செலவு குறைந்த பட்சம்???அப்போ இன்னும் 2026க்குள் இவ்வளவு பணம் சேர்க்கணும் வெறும் ஓட்டுக்காக


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை