உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமானவரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை: நிதித்துறை ஒப்புதல்

வருமானவரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை: நிதித்துறை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத் தொகை கோரி, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்றவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 2023 செம்டம்பரில் துவக்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற, தகுதியான நபர்களை தேர்வு செய்ய, ஒன்பது வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், 1.15 கோடி மகளிர் மட்டும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அவர்கள் குடும்ப ஓட்டுகள், எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்க, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவெடுத்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' வாயிலாக, மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில், வருவாய் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, புதிய பயனாளிகளுக்கு, டிசம்பரில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Mohan
அக் 25, 2025 08:07

நேர்மையாக வருமான வரி கட்டுபவர்கள் தான் ஏமாளிகள். எல்லாமே ஓட்டுக்காக என்றால் எதற்காக போட வேண்டும்?


Sridhar
அக் 24, 2025 18:22

ஆட்சிய இழக்க போவது உறுதி. இனிமே ஆயிரம் கொடுத்தா என்ன ஆராத்தி எடுத்தா என்ன? இப்போ விசயமே இவனுக தேர்தல்ல டெபாசிட் இழந்து தோத்ததுக்கப்புறம் இவனுகள எந்த ஜெயில்ல அடைக்கறதுங்கறது தான்.


A. Kumar
அக் 24, 2025 16:56

இலவசம் வேண்டாம். ரோடு.தண்ணீர்.மின்சாரம் , சுகாதாரம், கல்வி மூத்த குடிமக்கள் பென்சன் மட்டும் தேவை.மக்களை இலவசம் சோம்பேறி ஆக்கும்.


A.Gomathinayagam
அக் 24, 2025 14:19

வருமான வரி கட்டுவதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு பன்னிரண்டு லட்சம் என்ற நிலையில் தொண்ணுற்றைந்து விழக்காடு தமிழக மகளிர் உரிமை தொகை பெறுவார்கள்


தமிழன்
அக் 24, 2025 14:18

இலவசங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடக்கப் போவது என்னமோ உறுதி தான்


சிந்தனை
அக் 24, 2025 14:14

பாவம் அவர்கள் ஏழைகள் ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு தான் குடிக்கிறார்கள்


lana
அக் 24, 2025 13:34

சரி வருமானம் வரி காட்டுகிறரா இல்லையா என்று எப்படி கண்டுபிடிக்க. வாங்கிய தகவல் மனைவி உடையது. அவர் கணவர் விபரம் அல்லது பிள்ளைகள் விபரம் PAN card எதுவும் வாங்க வில்லை. அப்படியே கொடுத்தாலும் வரி காட்டினாரா இல்லை யா என்று மத்திய ஒன்றிய அரசு தான் சொல்ல வேண்டும். எனவே பணம் கொடுக்க முடியாது க்கு காரணம் ஒன்றிய அரசு மட்டுமே


Mohammed sumaiya Gulab
அக் 24, 2025 13:29

ஏன் வருமானவரி செலுத்துபவரை தவிர்க்கிறார்கள் ? அவர் வசதியாக இருக்கின்றார்கள், வங்கி கடன் வாங்கவே வேறு வழியின்றி வருமானவரி செலுத்துகின்றனர்.


C.SRIRAM
அக் 24, 2025 23:19

வரி கட்டுபவர் வசதியானவர் மற்றும் வரி கட்டாதவர் ஏய்ப்பவர் வசதியற்றவர் என்பது பொய் பிம்பம் மட்டுமே .


C.SRIRAM
அக் 24, 2025 13:11

இது யாருடைய உரிமை தொகை ?. ஏன் வருமானவரி செலுத்துபவரை தவிர்க்கிறார்கள் ?.


Rajarajan
அக் 24, 2025 12:49

ஆளும் கட்சி எதிர்கட்சியானால், நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்பதோடு சரி. அதே எதிர்க்கட்சி, ஆளும்கட்சியானால், இதே இலவசம், வீண் செலவுகள், ஊழல் தொடரும். அப்போது எதிர்க்கட்சி நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்கும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. எப்படியும், நிதிச்சுமையை சுமப்பது திருவாளர் தனியார் ஊழியர்/ ஏழை பாழை / அன்றாடம் காய்ச்சிகள் தானே. அவர்களிருக்க கவலை ஏன் ?


சமீபத்திய செய்தி