உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்

கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் என்பதால், சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, 'பஞ்ச முத்திரை மரியாதை' நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991ம் ஆண்டு செப்., 5ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. மடங்களின் தலைவர்களை கவுரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிட்டுக்குருவி
டிச 30, 2025 01:47

அரசுகள் சட்டங்கள் இயற்றுவதெல்லாம் மக்களுக்காக .ஆனால் சட்டங்கள் மக்களை சென்றடைவதில்லை .அதனால் தான் மக்கள் மரியாதைகேட்டுகூட நீதிமான்றம் நடுகின்றார்கள் .HR&CE சட்டம் தமிழுல் மொழிபெயர்த்து பெரியகோயில்களில் மக்கள் படித்தறியும்படி வைப்பது இதுபோன்ற விவகாரங்களை வராமலேயே தடுக்கும் .


சிட்டுக்குருவி
டிச 29, 2025 23:34

HR&CE ACT 1959 இன் படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது .ஆகம விதிகளை அமல் படுத்துவது அறங்காவலரின் தனிப்பட்ட அதிககாரமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது .இதில் யாருக்கு முதல் மரியாதை செய்வது முக்கியமெல்ல .அதில் யாருக்கு அதிகாரம் என்பதுதான் முக்கியம் .அறங்காவலரே முடிவு செய்யும் அதிகாரமுவுள்ளது .


vaiko
டிச 29, 2025 22:02

வரிசையில் நின்று சாமி கும்பிட்டால் குறைந்து போய்விடுவார்களா


Skywalker
டிச 29, 2025 22:02

Why always stopping hindu practices? Its been happening for ages, dont interfere


subramanian
டிச 29, 2025 21:48

தவறான பேச்சு. மடாதிபதிகள், ஜீயர்களுக்கு தரப்படும் மரியாதையில் தலையிட அறநிலையத்துறைக்கு எந்த விதமான அதிகாரமும் இல்லை.


தமிழ்வேள்
டிச 29, 2025 21:20

இதற்கு முன்னர் தாவாவில் குறிபிடப்பட்ட மடம் & மடாதிபதிகளுக்கு பஞ்ச முத்திரை மரியாதை வழங்கப்பட்டிருந்த ஆல், அதை தொடர்வதில் என்ன தவறு? என்ன கஷ்டம்? 1947 க்கு முன்பு இந்த மரியாதைகள் வழங்கப் பட்டிருந்தால், அவை இன்றும் தொடரவேண்டும்..செயல் அலுவலர் & ஆணையருக்கு கோவில் நடைமுறைகளில் தலையிடவோ மாற்றம் செய்யவோ எந்த அதிகாரமும் இல்லையே? மடாதிபதிகளுக்கு மரியாதை தரக்கூடாது என்றால், அமைச்சர், அதிகாரி, அரசியல் வாதிகளின் அல்லக்கை களுக்கு எல்லாம் முறை மீறிய மரியாதை செய்யப்படுகிறதே? அது ஏன்? எப்படி? எந்த சட்ட விதிப்படி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை