உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

புதுடில்லி: சென்னை, தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வேலூரில் நேற்று (ஏப்.,2) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறியிருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=41w9po7d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, இன்று மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, நிவாரணம் கோரி பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
ஏப் 03, 2024 18:52

பாஜக ஆட்சியில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராடித்தான் பெற முடியும்! அவ்வளவு நியாயமானவர்கள் பாஜகவினர்!


ஆரூர் ரங்
ஏப் 03, 2024 13:45

4500 கோடி பேக்கேஜ் கணக்கு என்னானது?


Lion Drsekar
ஏப் 03, 2024 13:07

அருமையான துவக்கம் இதே போன்று சாலை சரியாக போடாமல் போட்டதாக கணக்கு காட்டி வேலை செய்வதற்கு எதிராக மக்கள் வழக்கு போடலாமா, ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லையென்றால் பொங்கல் தொகை பெறாதவர்கள் வழக்கு தொடரலாமா, குழந்தை பிறக்கும் மருத்துவமனை முதல் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்யும் அரசு துறைக்கு எதிராக வழக்கு தொடரலாமா, சும்மா இருப்பார்களா, உயிரோடுதான் வாழவிடுவார்களா, பேங்க் வழியாக பணம் பட்டுவாடா செய்யாமல் பணமாக கொடுத்ததற்கு எதிராக வழக்கு தொடரலாமா, வந்தே மாதரம்


S.Bala
ஏப் 03, 2024 12:06

கேரளா அரசின் மனுவை தள்ளுபடி செய்ததை போல் தமிழக அரசின் மனுவும் தள்ளுபடி செய்யப்படும் ஆமாம் இந்த வக்கீலுக்கு ஒரு முறை ஆஜர் ஆவதற்கு ரூ ஐம்பது லட்சம் என்கிறார்களே இதற்கு நிதி எங்கிருந்து வருகிறது


Ramesh Sargam
ஏப் 03, 2024 12:01

இனி நிவாரணம் கிடைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? தேர்தல் செலவுக்கு பணம் பத்தவில்லையா?


duruvasar
ஏப் 03, 2024 12:02

ஓட்டுக்காக நடத்தப்படும் பித்தலாட்ட நாடகம் கொடுத்த பணத்திற்க்கு கணக்கு கொடுக்க வழியை காணோம் தேர்தல் சமய பித்தலாட்ட தத்தின் உச்சம்


Rathinakumar KN
ஏப் 03, 2024 12:01

அநேகமாக இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிடும்


Rathinakumar KN
ஏப் 03, 2024 12:01

அநேகமாக இந்த வழக்கை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிடும்


GMM
ஏப் 03, 2024 11:59

இது கட்சி அரசியல் பிரச்சனை சட்ட பிரச்சனை அல்ல வழக்கறிஞர்களுக்கு ஏன் அரசியல் நிர்வாக பிரச்சனையில் அதிகம் ஆர்வம்? விளம்பரம் , அரசியல் ஆதாயம் அப்படி என்றால் மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகள் மாநில நிர்வாகம் எதிர்த்து வழக்கு தொடர முடியும், பாராளுமன்றம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஏப் 03, 2024 11:11

அரசாங்கம் செய்யும் வேலையை.... நீதிமன்றம் செய்ய முடியாது.... அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.... நீதிமன்றம் சரியாக செயல்படவில்லை என்று.... நாடாளுமன்றம் குறுக்கிட்டால் ஏற்றுக்கொள்ள முடியுமா ???


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி