உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரியாணி ஹோட்டலில் சோதனைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாற்றம்

பிரியாணி ஹோட்டலில் சோதனைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பிலால் பிரியாணி ஹோட்டலுக்கு ஆய்வுக்கு சென்ற, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார், தரமற்ற உணவு மற்றும் இறைச்சி விற்பனையை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வந்தார். சமீபத்தில் தர்ப்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதால், உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று கூறிய அவர், செயற்கை கலப்படத்தை கண்டறிவது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.இந்த வீடியோவால், தர்ப்பூசணி விற்பனை குறைந்தது. விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக கிளம்பிய அரசியல் கட்சியினரும், உணவு பாதுகாப்பு துறைக்கு எதிராக திரும்பினர்.இதேபோல, சென்னையில் உள்ள பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட, 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அது குறித்த புகாரில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலால் ஹோட்டலில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் ஆய்வுக்கு சென்றார். அப்போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அவர் ஹோட்டலில் சோதனை செய்யாமல், பாதியில் திரும்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போதிலும், சதீஷ்குமாரை பொது சுகாதார துறைக்கு இடமாற்றம் செய்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது அவருக்கு பணி ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படவில்லை. மேலும், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.'இந்த திடீர் பணியிட மாற்றம், ஒரு அதிகாரி தன் கடமையை செய்ததற்கு தண்டனையா?' என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Balakrishnen a
ஏப் 07, 2025 17:34

நீதிக்கும் நேர்மைக்கும் எதிரான தீர்ப்பு


Ramanathan Rnathan
ஏப் 06, 2025 10:23

ஓட்டு போட்ட நமக்கு வேண்டும் தண்டனை தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு தட்டி கேட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதுதான் திராவிட மாடல் அரசு


sugumar s
ஏப் 06, 2025 09:03

it is DM people hotel. how dare he went for inspection? that was why he was changed. He is lucky that he has not been dismissed from services for violating code of conduct


VENKATASUBRAMANIAN
ஏப் 06, 2025 08:35

இதுதான் திராவிட மாடல். தவறை தட்டிக்கேட்டால் பணியிடம் மாற்றம். திமுகவினர் செய்யும் அராஜகம். மக்கள் சிந்திக்க வேண்டும். இவர்களுக்கு ஓட்டு போட்டால் நாட்டையே விற்பனை செய்வார்கள்.


Chandrasekaran Balasubramaniam
ஏப் 06, 2025 08:35

இனியாவது நாள்தோறும் அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்யுங்க. மக்களின் வரிப்பணத்தின் ஊதியதுக்கு நாள்தோறும் வேலை செய்யுங்க. சுரபிரிஸ் சோதனையை ஏரியா பிரித்து சோதனை செய்யுங்க.


Oru Indiyan
ஏப் 06, 2025 08:07

தமிழக வக்ப் தலைவர் கனி அழைப்பின் பேரில் நடந்த இடமாற்றம்.


Lakshminarayanan Ramanujam
ஏப் 06, 2025 07:51

அதிகாரியை மாற்றியவர், இழப்பீடு குடுப்பார்கள், அனைத்து பாதிக்க பட்ட குடும்பத்தினர்கும்?


Sankar Ramu
ஏப் 06, 2025 07:48

திராவிடிய மாடல்.


Siva Balan
ஏப் 06, 2025 07:33

தமிழர்கள் நடத்தும் ஓட்டலில் மட்டுமே சோதனை செய்ய வேண்டும். அடிமை தமிழர்களுக்கு எப்போது புரியுமோ....


Varadarajan Nagarajan
ஏப் 06, 2025 07:23

உண்மையான பிரச்சனையை எவ்வளவு அழகாக திசை திருப்பப் பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டதைத்தான் தற்பொழுது பேசுபொருளாக்கப் பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த ஹோட்டலில் சாப்பிட்ட 30கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக வந்த புகாரின்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள் தற்போதைய நிலை என்ன என்ற மெயின் விஷயம் எவ்வளவு அழகாக மறைக்கப்பட்டுள்ளது. இதுதான் ஊடகங்களின் திறமை மற்றும் மக்களின் ஞாபகமறதியின் உச்சம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை