உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

துபாயில் இருந்து கடத்தி வந்தது யார்; ஸ்ரீபெரும்புதூரில் ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18.2 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.துபாயில் இருந்து கடல் வழியாக குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களில் வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் சென்னை மண்டல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.இதன்படி, அதிகாரிகள் நடத்திய சோதனையில் 92.1 லட்சம் ( எண்ணிக்கையில்) வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.18.2 கோடி (தோராயமாக) ஆகும். இந்த சிகரெட் பெட்டிகளில் 2003ம் ஆண்டு சட்டப்படி, உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படவில்லை.கடந்த ஓராண்டில் மட்டும், சென்னை துறைமுகம் வழியாக கடத்தி வரப்பட்ட 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.79.67 கோடியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
ஜூன் 25, 2025 04:07

அயலக அணியும் செயலக அணியும் இணைந்து அனைத்து வித போதை வஸ்துக்களும் கடத்தி இன்புற்று வாழ்கிறார்கள். நீதி மற்றும் நிதி மன்றங்களை விலைகொடுத்து வாங்குவது அவர்களுக்கு மிக எளிதான காரியம்.


Anantharaman Srinivasan
ஜூன் 24, 2025 23:20

வெளிநாட்டு சிகரெட் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிடங்கு யாருடையது..?? அதை கண்டு பிடித்து குற்றவாளிகளை பிடிப்பது போலீசுக்கும் உளவுத்துறைக்கும் ரொம்ப கஷ்டமோ..? Mostly அந்த மதத்தை சார்ந்தவனாயிருப்பான். பின்புலத்தில் திராவிட Support இருக்கும்.


V Venkatachalam
ஜூன் 24, 2025 20:19

இது சம்பந்தமாக விடியல் அண்ட் பப்பு விடப்போகும் அறிக்கை. அதாவது அதானி போர்ட் வழியாக கடத்தி வரப்பட்ட சிகரெட். இந்த கடத்தலுக்கு மூல காரணமே அதானி வசமுள்ள போர்ட்தான். இந்த சிகரெட் பணக்காரர்கள் உபயோகப்படுத்தவே கடத்தி வரப்பட்டு இருக்கிறது.


Ramesh Sargam
ஜூன் 24, 2025 20:01

யார் அந்த சார் கேள்வி போய், இப்ப யார் அந்த கடத்தல் சார் கேள்வி? இதற்காவது விடை கிடைக்குமா?


Kalyanaraman
ஜூன் 24, 2025 21:08

அந்த சார்தான் இந்த சார்.


சமீபத்திய செய்தி