உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்

500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்

சென்னை: சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:பா.ம.க., - சிவகுமார்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் கிராமத்தில், வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: மயிலம் தொகுதியில், வன விலங்குகள் நடமாட்டம் மிகக்குறைவு. காட்டுப்பன்றிகள், குரங்குகள் மட்டுமே உள்ளன. எனவே, வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் திட்டம் இல்லை.சிவகுமார்: மயிலம் தொகுதியில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும். பகிங்ஹாம் கால்வாயில், கடுவேளி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.அமைச்சர்: பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில், ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.சிவகுமார்: செஞ்சி ஒன்றியம், ஆலம்பூண்டியில் இருந்து மழுவந்தாங்கல் செல்லும் சாலை, வனத்துறை வழியே 6 கி.மீ., செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை அமைக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும். சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த 130 ஏக்கர் நிலத்தில், பசுமை பூங்கா அமைக்க வேண்டும்.அமைச்சர்: வனத்துறை மூலமாக, 500 கி.மீ., நீளத்திற்கு, 250 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட உள்ளது. புதிய சாலை அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
ஏப் 02, 2025 09:06

வனத்துறை மூலமாக, 500 கி.மீ., நீளத்திற்கு, 250 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட உள்ளது மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள சாலைகளை பழுபார்க்கவே நேரமும் பணமும் இல்லாதபோது மிருகங்கள் நடமாடும் வனங்களில் எதற்கைய்யா இந்த வீண் செலவு மிருகக்கண்கள் நடமாட உங்களை சாலைகள் கேட்டனவா


M R Radha
ஏப் 02, 2025 11:45

எல்லா திட்டங்களிலும் வரி பணத்தை சுரண்டி தின்பது மற்றும் தமிழக கடனை வானத்தின் எல்லைக்கே கூட்டிச் செல்வது


ARUL.K ARUL.K
ஏப் 02, 2025 07:42

சூப்பர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை