உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட் 13) திமுகவில் இணைந்தார்.தமிழக அரசியலில் பாஜ - அதிமுக - பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3bpdfryn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இடையே மோதல் ஏற்பட்டபோது, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மைத்ரேயன், 2022ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, மீண்டும் பாஜவில் இணைந்த அவர் அந்த கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் அதிமுகவில் கடந்தாண்டு இணைந்தார். அவருக்கு அதிமுகவின் அமைப்பு செயலாளர் பதவியை இபிஎஸ் வழங்கினார். தற்போது அவர் இன்று (ஆகஸ்ட் 13) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். தேர்தல் நேரத்தில் முக்கியமான தலைவர் அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

திமுகவில் இணைந்தது ஏன்?

திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அதிமுக-பாஜ இடையே கூட்டணியில் தெளிவு இல்லை; பலர் மனக் குழப்பத்தில் உள்ளனர். கட்சியில் என்னைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.மாற்றம் ஒன்று தான் மாறாதது. அதனால் அடுத்த இலக்கை நோக்கிச் செல்கிறேன். டில்லியின் கட்டுப்பாட்டில் இபிஎஸ் உள்ளார்.உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; 2026ல் திமுக வெற்றி பெறும். 2ம் இடத்திற்குத் தான் இப்போது போட்டி தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக இணைந்துக் கொள்ள விரும்பி திமுகனில் இணைந்துள்ளேன். அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டில்லி இருக்கிறது. டில்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது.நாளைக்கு ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் கூட, பாஜவின் பங்கு எந்தளவிற்கு இருக்கும். மத்திய அரசின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் யோசிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நீக்கம்

திமுகவில் இணைந்த அடுத்த நொடியே மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ''அதிமுகவின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மைத்ரேயனை நீக்குவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 77 )

M Ramachandran
ஆக 21, 2025 03:01

கெட்டவனாக மாற தீ மு காவில் சேர்


Tamilan
ஆக 18, 2025 20:57

அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு ஏற்கனவே திமுகவில் இணைந்து விட்டார்


M Ramachandran
ஆக 17, 2025 22:13

பதவிக்கு அலை பவறாக அவர் தெளிவு படுத்தியுள்ளார்.


M S RAGHUNATHAN
ஆக 13, 2025 20:07

அம்மன் காசுக்கு பிரயோஜனம் இல்லை.இவர் வீட்டில் இருப்பவர்களே இவர் சொல்லி வாக்கு போடமாட்டார்கள்.இவரும் பழக்க தோஷத்தில் இரட்டை இலையில் வாக்கு செலுத்திவிடுவார்.


தாமரை மலர்கிறது
ஆக 13, 2025 19:03

ஒரு நல்ல ஆடு மந்தையை விட்டு வெளியேறி நரிக்கூட்டத்தில் இணைவதால், ஒன்றும் மாறபோவதில்லை. மைத்ரேயன் கூற்றுப்படி எடப்பாடி பிஜேபி கட்டுப்பாட்டில் இல்லை. எடப்பாடி அமித் ஷா கூறுவதை மரியாதையாக பெரும் மதிப்புடன் எடுத்துக்கொள்கிறார்.காரணம் அமித் ஷா ஒரு பெரிய சாணக்கியவாதி.எடப்பாடியின் அமைச்சர்கள் மோடியை அம்மாவிற்கு பிறகு எங்களுக்கு கிடைத்த டாடி மரியாதையாக சொல்கிறார்கள். இது கட்சியை தாண்டி மோடி அதிமுகவில் பெற்று இருக்கும் செல்வாக்கு. இதை கண்டு திமுகவினர் வயிறு எரியக்கூடாது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 13, 2025 19:59

அம்மா திமுக இப்போ சேட்டுங்க கிட்டே அடகு வெச்சி அமீத்சா திமுகவாகி விட்டது.


vivek
ஆக 13, 2025 22:41

அதை வாழ்நாள் கொத்தடிமை பொய் இந்து சொல்லும்போது பொருத்தமா இருக்கு


Raja
ஆக 13, 2025 19:01

இவர் எங்கு சென்றாலும் உருப்படாது


ponssasi
ஆக 13, 2025 17:44

ஒரு சீட்டு எதிர்பார்க்கலாம் ஆனா ஜெயிக்கமுடியுமானு பாக்கணும். பழுத்த அரசியல்வாதி மைத்திரேயன் திமுகா ஜெயிக்கும்னு சொல்லல, சாதுர்யமா அதிமுகா வெற்றிபெற்றாலும்னு சொல்லுறார்


Kovandakurichy Govindaraj
ஆக 13, 2025 17:17

பழனி அதிமுகவை காவு வாங்காமல் ஓய மாட்டான்


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 13, 2025 17:11

அதிமுகவின் ஸ்விட்ச் டெல்லியில் இருந்து இயக்கப்படுவதாக கூறும் இவர், நேற்று வரை அதே டெல்லியின் இயக்கத்தில்தானே இருந்தார். ஒருவேளை டெல்லியின் இயக்கத்தின் அடிப்படையில்தான் இன்று தாவி இருக்கிறாரோ? எப்படியோ மாசம் ரெண்டு லட்சத்துக்கும் மேல பென்ஷன் வருது, அதுக்கு அந்த அம்மா புண்ணியம் கட்டிக்கிச்சு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 13, 2025 17:08

புதிதாக இணைந்துள்ள இளவல் மைத்ரேயனுக்கு ஆரியர் அணித்தலைவர் பதவி வழங்கப்படுகிறது. துணைத்தலைவர் பதவிக்கு எஸ் வி சேகர்தான் பொருத்தமானவர் என்று கருதுவதால் அந்தப்பதவிக்கான பிளாஸ்டிக் சேர் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. விரைவில் கொள்முதல் செய்யப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை