உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விடுதலை

நாகர்கோவில்: கடந்த, 1996- முதல் 2001- வரை தி.மு.க., ஆட்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் ராஜன் இருந்தார். அந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 17 லட்சத்து 20,916 ரூபாய் மதிப்பீட்டில் சொத்து சேர்த்ததாக, 2002ல் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது தந்தை நீலகண்டன், தாய் ராஜம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சுரேஷ் ராஜன் மற்றும் அவரது பெற்றோரை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, 2012-ல் விடுதலை செய்து உத்தரவிட்டது.எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. இதன்படி, இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கு விசாரணை, நாகர்கோவிலில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க் கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கார்த்திகேயன், சுரேஷ் ராஜனை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். அவரது தாய், தந்தையர் ஏற்கனவே இறந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை