உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  முதல்வர் பேசுவது போல் வீடியோ வெளியிட்டு மோசடி செய்தவர் கைது

 முதல்வர் பேசுவது போல் வீடியோ வெளியிட்டு மோசடி செய்தவர் கைது

சென்னை: 'ஏஐ' எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போல், 'வீடியோ' வெளியிட்டு, பண மோசடி செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த, ஷயாபுகான், 28, என்பவர் கைது செய்யப்பட்டார். பொது மக்களுக்கு ஏதேனும் பண உதவி தேவைப்பட்டால், இந்த 'வாட்ஸாப்' எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'வீடியோ'க்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த வீடியோக்கள், பாகிஸ்தானை சேர்ந்த நபர்களின், 'முகநுால் கணக்கில் இருந்து பகிரப்பட்டு இருக்கலாம்' என, சந்தேகம் எழுந்தது. இது குறித்து, தமிழக காவல் துறையின், சி.பி.சி.ஐ.டி., சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள், முதல்வர் விஜய் ஹிந்தியில் பேசுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு, ம.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம், பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மற்றும் ம.பி.,யில் முகாமிட்டு, விசா ரணை நடத்தினர். சந்தேக நபர்கள் குறித்து, பட்டியல் தயாரித்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரான, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷயாபுகான், 28, என்பவரை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

rasaa
செப் 15, 2026 10:28

இந்தியாவில் மட்டும் அல்ல. உலகின் எந்த ஒரு நாட்டிலும் மோசமான நிகழ்வுகள், குற்றங்கள் நடந்தால் அது அமைதி?மார்கத்தினராகத்தான் இருக்கும்.


V RAMASWAMY
செப் 15, 2026 09:33

மோசடிகளிலும், கொலை கொள்ளை தேச விரோத செயல்களில் முன்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பெயரைப் பார்த்தாலே தெரியும்.


Ragupathy
செப் 15, 2026 09:19

கரூரில் 41 பேரின் உடல்களை இரவோடு இரவாக பிரேதப் பரிசோதனை செய்தது திமுக தான் முக்கியக் குற்றவாளின்னு சுட்டிக்காட்டுகிறது.


ராஜா
செப் 15, 2026 08:12

ராகுல் மற்றும் விஜய் பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். விடியோ வேண்டுமானால் போலியாக இருக்கலாம் ஆனால் உண்மை அது தான்.


Barakat Ali
செப் 15, 2026 08:09

மோசடிதான் ....


வாய்மையே வெல்லும்
செப் 15, 2026 08:06

திருட்டு தனம் எங்கு ஆரம்பித்தது என்று ஆராய்ந்து பார்த்தால் அநேக கைகள் காட்டும். அம்புட்டும் விஷம் . ஊருக்கு ஊரு கிளம்பிட்டாங்க ..எல்லோரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்த. இப்படி வாழ்ந்து என்ன கிழிக்க போகிறார்கள்


ஆகுயர்த்தோன்
செப் 15, 2026 06:29

இந்த மாதிரி நிகழ்வுக்கு எல்லாம் கைது என்றால் 6 மாதம் முன்னே ஸ்டாலின் இதை செய்து இருந்தால் இவங்க பவிசு நாறி இருக்கும் ஸ்டாலின் 41 பேர் கொன்று விட்டு ஓடியவரை கைது செய்யாமல் விட்டதில் விளைவு


விருமாண்டி, Benaras
செப் 15, 2026 07:20

இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவரை ஒன்றும் செய்யாமல் விட்டதன் விளைவு, தீவிரவாத செயல்கள் செய்த வனை சிலிண்டர் வெடிப்பு அப்டினு ஓட்டு பிச்சைகாக ஒன்றும் செய்யாமல் விட்ட விளைவு, வேங்கை வயல் கொடுமைக்கு ஒன்றும் செய்யாமல் விட்டதன் விளைவு கள்ளக்குருச்சி சாராய மரணத்திற்கு காரணமானவர்களை ஒன்றும் செயாமல் விட்டதன் விளைவு, சர்காரியா அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதன் விளைவு, வீராணம் ஊழல் மீதும் 2 ஜீ வழக்கு மீதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவு இப்படி பற்பல விளைவுகள் உண்டு கொத்தடிமை ஆகுயார் அவர்களே...


Balaji
செப் 15, 2026 08:36

ஸ்டாலின் 41 பேரை கொன்று விட்டு என்ற வார்த்தை சரியாக அமைந்துள்ளது. வழக்கு சிபிஐ கிட்ட இருக்கு. திமுக வின் உருட்டுக்கு அந்த வழக்கின் தீர்ப்பு பதில் சொல்லும்


V Venkatachalam, Chennai-87
செப் 15, 2026 09:19

மயக்கம் வர்ர மாதிரி கருத்து? நெஜமாவே மயக்கம் வந்துடுத்து. வண்டி யு டர்ன் போட்டு சரியான பாதையில் போவுது?.


சமீபத்திய செய்தி