உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி- அபுதாபி சேவை இனி இல்லை; இன்டிகோ அறிவிப்பால் பயணிகளுக்கு ஷாக்

திருச்சி- அபுதாபி சேவை இனி இல்லை; இன்டிகோ அறிவிப்பால் பயணிகளுக்கு ஷாக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருச்சி-அபுதாபி விமான சேவையை அக்டோபர் 25ம் தேதி முதல் ரத்து செய்வதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் பல விமானங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றன. அபுதாபிக்கு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி முதல் விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என வாரத்தில் 4 நாட்கள் விமான சேவை இருந்தது.மும்பை, கொச்சி, ஹைதராபாத் என 13 நகரங்களுக்கும் இன்டிகோ விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை வரும் (அக்.25) முதல் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்வோருக்கு பயன் உள்ள வகையில் இருந்த விமான சேவை நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Trichy
அக் 22, 2024 10:29

This flight is always full, the ticket prices also very high. Indigo has stopped even Chennai to Muscat also for last few months and Oman air is ging very high prices to the customers on Chennai route. Because there is no direct Air India flight also. The airlines suppose to provide the reasons behind the issues.


Tiruchanur
அக் 21, 2024 21:01

தங்கம் கடத்துற முக்காப்லா கும்பல் ரொம்பவே அதிகம். இவனுங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்


சாண்டில்யன்
அக் 21, 2024 20:49

எதுக்கும் யார்மீதாவது பழிபோடணும்னு மனசு துடிக்கும் மனசுல முதல்ல சுடாலின் வரார் அடுத்து மோடி வரார் அவர் சமீபத்துல அங்கே போனாரே


Gopalan
அக் 21, 2024 20:31

லாபகரமான ரூட் ஆனால் யாரும் நிறுத்த மாட்டார்கள். பயணிகள் எண்ணிக்கை போதுமானதாக இருக்காது


Vijay D Ratnam
அக் 21, 2024 20:19

கோயம்பத்தூரில் இருந்து நவம்பர் மாதம் முதல் அதிக விமானங்கள் இயக்கவிருப்பதாக செய்தி இதே தினமலரில் செய்தி படித்தேன்.


Saai Sundharamurthy AVK
அக் 21, 2024 20:13

ஏற்கனவே 2010 வாக்கில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து திருச்சி வழியாக அபுதாபிக்கு விமான சேவை செய்து வந்தது. சில ஆண்டுகளில் அந்த சேவை நிறுத்தப்பட்டு சென்னையிலிருந்து கோழிக்கோடு வழியாக இயக்கப்பட்டது. என்ன ரகசியம் என்று தான் தெரியவில்லை..... இப்போதும் அதே மாதிரி திடீர் என்று சேவையை துவங்கி திடீர் என்று நிறுத்தப்பட்டிருக்கிறது. விமான நிறுவனம் தகுந்த காரணங்களை அறிவிக்க வேண்டும்.


Ramesh Sargam
அக் 21, 2024 20:03

வருமானம் இல்லை போல தெரிகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை