உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடமாநிலங்களில் உறைபனி எதிரொலி; தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோ டின் ரூ.2,000 சரிவு

வடமாநிலங்களில் உறைபனி எதிரொலி; தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோ டின் ரூ.2,000 சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

வடமாநிலங்களில் நிலவும் உறைபனியால், தேங்காய் எண்ணெய் பயன்பாடு முற்றிலும் குறைந்ததால், 15 கிலோ டின்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது.கோவை, திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. இதில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய், கொப்பரையாக்கப்பட்டு காங்கயம் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அங்கு, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து, உள்மாநில தேவைக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கேரளாவில் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்தது. இதனால், தேங்காய் எண்ணெய் விலை விண்ணை முட்டும் உயரத்தில் இருந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் உறைபனி அதிகம் உள்ளதால் தேங்காய் எண்ணெயின் தேவை குறைந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நலச்சங்க பிரதிநிதி தங்கவேலு கூறியதாவது: நடப்பாண்டு தேங்காய் வரத்து குறைந்ததால், கொப்பரை, தேங்காய் எண்ணெய், தேங்காய் விலை வேகமாக உயர்ந்தது. காங்கயம், ஊத்துக்குளியில் இருந்து தினமும், 500 டன் தேங்காய் எண்ணெய் வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.வடமாநிலங்களில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. உறைபனியால், தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக கடுகு எண்ணெய் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால், கடந்த மாதம், 5,500 ரூபாய் வரை விற்கப்பட்ட 15 கிலோ டின் தேங்காய் எண்ணெய், தற்போது, 3,450 ரூபாயாக குறைந்துள்ளது. 15 கிலோ டின்னுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்து உள்ளது. வரும் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை பனிக்காலம் என்பதால் விலை சரிவு தொடரக்கூடும். எனினும், இது தற்காலிக விலை சரிவு தான். தேங்காய் உற்பத்தி அதிக அளவில் இல்லாததால், பனிக்காலம் நிறைவடைந்ததும் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Winvelinayagan
டிச 25, 2025 13:20

எந்த காரணம் இருந்தாலும், விலை குறைவால் மக்கள் பயன்படுவார்களே, அதுக்காக இந்த உறைபனிக்கு நன்றி சொல்லலாம்


Winvelinayagan
டிச 25, 2025 12:39

தென்னை விவசாயிகளை பாதுகாக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தலாமே,


J Guru madurai
டிச 25, 2025 12:36

tn farmers asking the govt to start distributing coconut oil in rashion shops, but what will rashion staff do if the temperature goes down in winter months, how will they distribute oil to customers, any solutions?


தங்கபாண்டி
டிச 25, 2025 12:34

இன்னும் இரண்டு மாதத்திற்கு தேங்காய் எண்ணெய் உபயோகத்தை குறைத்து விட வேண்டியது தான்


vino
டிச 25, 2025 12:33

தங்கத்துக்கு போட்டியா? தேங்காய் எண்ணெய்... திடீர் விலை உயர்வுக்கு காரணத்தை தெரியப்படுத்தியது உபயோகமாக இருந்தது


பி சங்கரநாராயணன் ஈரோடு
டிச 25, 2025 12:30

இன்னும் ரெண்டு மாசத்துக்கு குளிர் இப்படித்தான் இருக்கும்


புண்ணியகோடி
டிச 25, 2025 12:29

மற்ற சமையல் எண்ணெய்களை காட்டிலும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது. ருசியும் அதிகம். நம்ம மக்களுக்கு தான் நல்லது பிடிக்காதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை