உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொரோனா கால செலவுக்கு ஒதுக்கிய நிதி: ரூ.265 கோடியை செலவிடாத தமிழகம்

கொரோனா கால செலவுக்கு ஒதுக்கிய நிதி: ரூ.265 கோடியை செலவிடாத தமிழகம்

சென்னை: 'தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியில், 265 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கவும், கட்டுப்படுத்தவும், மத்திய, மாநில நிதிகள், மாநில பேரிடர் நிவாரண நிதி, பி.எம்.கேர்ஸ் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளை தேசிய சுகாதார இயக்கம் நிர்வகித்தது. அதன்படி, மத்திய அரசின், 1,435.59 கோடி ரூபாய்; மாநில அரசின், 351.89 கோடி ரூபாய் என, 1,787.48 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டது. அதில், 1,522.75 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், 264.73 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. அதேபோல், மத்திய அரசால் வழங்கப்பட்ட, 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில், 147 பயன்படுத்தப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9du1qpjq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொரோனா காலத்தில், 'என் - 95' முகக்கவசங்கள் மொத்தமாக கொள்முதல் செய்திருந்தால், 82.95 லட்சம் ரூபாய் செலவை தவிர்த்திருக்கலாம். மேலும், குடும்ப நல இயக்குநரகத்தில் வட்டார விரிவாக்க கல்வியாளர், குடும்ப நல உதவியாளர், கல்வியாளர், பெண் சுகாதார பார்வையாளர், மகப்பேறு குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 75 சதவீதத்துக்கு மேற்பட்ட பற்றாக்குறை காணப்படுகிறது.மருத்துவ பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தனிப்பட்ட வாரியம் அமைக்கப்பட்டிருந்த போதிலும், ஆட்சேர்ப்பில் தாமதம் காணப்படுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் கீழ் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், மாற்று மருந்துகளை பிரபலமாக்கும் அரசின் கொள்கை பாதிப்படைந்துள்ளது. எனவே, குடும்ப நல திட்டங்களை தொடர்ந்து திறம்பட அமல்படுத்துவதற்கு போதுமான பணியாளர்கள் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தியாகு
டிச 11, 2024 11:33

முதல் அலையின்போது அஇஅதிமுகவும் இரண்டாவது அலையின்போது திமுகவும் ஆட்சியில் இருந்தன


Perumal Pillai
டிச 11, 2024 10:04

இவ்வளவு ரூபாய்க்கும் அந்த புத்தகம் வாங்கி hospital மட்டுமல்லாது ஊர் ஊராய் கொடுத்து EPS செலவழித்துருக்கலாம் .


Prasanna Krishnan R
டிச 11, 2024 09:25

All mediators are the rulers. Go and sell your - in red light area


AMLA ASOKAN
டிச 11, 2024 08:54

கொரோனாவின் பொது தமிழகத்தை ஆண்டது ADMK . இதற்கு எடப்பாடி தான் பதில் சொல்ல வேண்டும் .


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 09:39

பாமரத்தனமான கருத்து .... இன்றுள்ள அதிகாரிகளே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் .... ஆட்சி மாறும்போது / அதிகாரிகள் மாறும்போது அதிகாரிகள் பொறுப்பை ஒப்படைத்து விட்டே அகலவேண்டும் ....


ஆரூர் ரங்
டிச 11, 2024 11:11

2021 இல் கோவிட் இரண்டாவது அலை முடிகிற நேரத்தில் விடியல் பதவிக்கு வந்து தன்னால்தான் கொரோனாவே உலகை விட்டு ஓடியது போல ஃபிலிம் காட்டினார். மத்திய இலவச தடுப்பூசிக்கு விடியல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது .மத்திய நிதியை செலவழித்தால் கணக்குக் கேட்பர் என்பதினால் செலவழிக்காமல் விட்டிருப்பார். வரலாறு முக்கியம் அண்ணே.


sankaranarayanan
டிச 11, 2024 08:47

எவ்வளவுதான் எங்களால் பதுக்க முடியுமோ அவைகளை பதுக்கிவிட்டோம் இதற்குமேல் எங்களால் பதுக்க இடம் இல்லை முடியவில்லை வழி தெரியாமல் பாக்கி பணத்தை அப்படியே வைத்துள்ளோம் போதுமா விவரம்


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 08:44

என் மாப்பிள்ளை டீயும், பன் ன்னும் சாப்பிட அதை செலவு பண்ணிட்டாரு ......


Sampath Kumar
டிச 11, 2024 08:12

ஒதுக்கியதை தனக்காக ஒதுக்காமல் மக்களுக்கு செயளவு செய்வது இதன் மூலம் உறுதி படுத்த ஆட்டு உள்ளது மேலும் கொரோனா காலம் பதிவில் இருந்தது அண்ணா திமுகதான் ஸ்டாலின் பின் வந்தவர் இருந்தும் மக்கள் பண்ணிக்கு செல்வு செய்து உள்ளார் அவர் ஒன்றும் சும்மா கேட்டாக வில்லை தங்களின் இ கதைதான் இந்த பிஜேபி அரசிடம் கேக்கிறார் அது அவரின் கடமை கொடுக்க மார்க்கும் நிதிகள் எத்தனையோ உன்டு அதனினும் ஓரடி பெறுகிறார் இங்கு உள்ள சாங்கி சொங்கிள்கள் ஸ்டாலினை குறை கூர்வதை விட்டு உங்க பிஜேபி காரனிடம்தாமில் நட்டு நிதி வழக்கவேண்டும் என்று பொறவுவீர்கள் மாட்டர்கள் பின்ன ஏத்துக்கு இந்த ஓரவஞ்சனை புத்தி போவியா


Mettai* Tamil
டிச 11, 2024 09:51

முதலில் தமிழை நன்றாக எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள் ...


hari
டிச 11, 2024 10:07

ஒரு கொரோனா தப்பி போயாச்சு...இப்போ கருத்து போடுது


N Sasikumar Yadhav
டிச 11, 2024 11:51

ஆஹா அற்புதம் உங்க திராவிட தமிழுக்கு பத்திரிக்கையில் பேராசிரியர் பணி கிடைக்கும் . உங்க திராவிட மகடல் தமிழ் பதிவை வாசிக்கும்போதே அப்படியே மெய்சிலிர்க்கிறது எனக்கு


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
டிச 11, 2024 06:56

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.அவர்களால் தமிழகம் ஒதுக்கப்படுகிறது என்றெல்லாம் மேடையில் பேசும் மாண்புமிகு முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் . கொடுத்த நிதியை திறன்பட செலவழித்திருந்தால் வெள்ள நிவாரணம் மற்றும் பிற எல்லாவற்றிற்க்கும் நம்மிடமும அவர்களிடம் கேட்பதற்கு கேள்விகள் இருந்திருக்கும்.இவை எல்லாவறறிற்க்கும் மேலாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பயன்படுத்தப்படாமல் இருந்ததை என்னவென்று சொல்ல அடுத்தவர்களை குறை கூறுவதற்கு முன் அதற்கேற்ப நமது தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமல்லவா


Rathnam Mm
டிச 11, 2024 07:27

excellent


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை