உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய சாவு பற்றி ‛கப்சிப்: திமுக கூட்டணி கட்சிகள் மீது இபிஎஸ் பாய்ச்சல்

கள்ளச்சாராய சாவு பற்றி ‛கப்சிப்: திமுக கூட்டணி கட்சிகள் மீது இபிஎஸ் பாய்ச்சல்

சென்னை : ‛‛ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக திமுக., கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

கவலைக்கிடம்

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்து உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 96 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பலருக்கு கண் பார்வை பறிபோனதாக தகவல் வருகிறது.

அர்த்தம் இல்லை

இது குறித்து பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். அவர் நடுநிலையுடன் செயல்படவில்லை. மக்கள் பிரச்னை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்கள் பிரச்னைகளை பேசவே எங்களை தேர்வு செய்துள்ளனர். பதற வைக்கும் மரணம் குறித்து பேசாவிட்டால் எம்எல்ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

படுகொலை

தொடர் மரணத்தால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். ஆர்பி உதய்குமார் கைது செய்யும் அளவுக்கு அடக்குமுறை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். பேச அனுமதி கேட்ட உதயகுமாரை அலேக்காக தூக்கி வெளியேற்றினர். இது ஜனநாயக படுகொலை.

பதவி விலக வேண்டும்

திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளசாராயம் அருந்தி பலரும் உயிரிழந்துள்ளனர்.மக்கள் அதிகம் நடமாடும் மையப்பகுதியில் 3 ஆண்டு கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் பறிபோகும் என தெரியவில்லை.

தூண்டுதல்

கள்ளச்சாராய மரணத்தை மறைக்க கலெக்டர் முயற்சித்தார். அவர் நேர்மையுடன் செயல்பட்டு இருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். அரசின் தூண்டுதலினால் கலெக்டர் பொய் பேசினார். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கலெக்டர் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

விற்பனைக்கு துணை

கள்ளச்சாராய விற்பனைக்கு தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு பங்கு உண்டு. இரண்டு கவுன்சிலர்கள் உடந்தையாக இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்ததாக செய்தி வருகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கவில்லை. கட்சிக்காரர்களை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளனர். ஆளுங்கட்சி கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகிறது.

மவுனம்

இதை எல்லாம் தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு மரணம் ஏற்பட்டு உள்ளது. 25 ஆண்டுகள் கூட்டணி தொடரும் என்ற காங்கிரஸ் கட்சிக்கு எது நடந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டும் முக்கியம். கம்யூனிஸ்ட்கள் மேம்போக்காக பேசி உள்ளனர். திருமாவளவன் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. இதனால், என்ன பயன். தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வையுங்கள். முடிந்த உடன் மக்களுக்காக குரல் கொடுங்கள். ஆளுங்கட்சிக்கு துணை போகாதீர்கள். இல்லையென்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது.

சிபிஐ விசாரணை

பேச அனுமதி கேட்ட உதயகுமாரை கைது செய்ய முயற்சி செய்தனர். இது என்ன சர்வாதிகாரி ஆட்சியா?கள்ளச்சாராய விற்பனை குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். கடந்தாண்டு மரக்காணம் மதுராந்தகம் கள்ளச்சாராய சம்பவத்தின் போது இரும்புககரம் கொண்டு ஒடுக்குவதாக கூறினார்கள். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட திமுக, தற்போது மவுனம் காத்து வருகிறது. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Govind Puramm
ஜூன் 21, 2024 20:21

அதுமட்டுமின்றி ஊடகங்கள் வாய்யடைத்து உள்ளது


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 17:27

இப்படி கேள்வி கேட்ட எப்படி.. பதட்டம் இருக்குமில்ல .. கொஞ்சம் அங்க இங்க படாம கேளுங்க .. பங்காளிக்கும் ஒரு மனசுன்னு இருக்கு இல்ல . அவங்களும் யோசிக்க நேரம் குடுங்க அய்யா , நீங்க என்ன படத்தில் வேணும்னா பேசுரீங்க , இருப்ப காட்டணும். ஆவளவுதானா ..


M S RAGHUNATHAN
ஜூன் 21, 2024 16:14

ஏதாவது கண்டனம் தெரிவித்தால் கேடிகளுக்கு கோடிகள் கிடைக்காது. அடிமைகள் வாய் திறக்க கூடாது


J.Isaac
ஜூன் 21, 2024 16:07

இதை விட மொபைல் அடிமைத்தனத்தின் மூலம் கோடிக்கணக்கான பேர் மனதில் மறைமுகமாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது


Maheesh
ஜூன் 21, 2024 15:56

இறந்தவர்களில் பல பேர் திருமா நம்பி இருக்கும் வகுப்பினரை சேர்ந்தவர்கள் என்று கேள்விப்படுகிறோம். இருந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அடங்கி இருப்பதன் காரணம் என்ன? திருமாவும் திமுக பொதுவாக நடத்தும் நாடகத்தின் ஒரு நடிகர் தான் என்பது தெரிகிறது.


இராம தாசன்
ஜூன் 21, 2024 21:04

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த ஊரில் அனைத்து வாக்குகளும் தி மு கவிற்கே விழுந்து உள்ளதாக சொல்கிறார்கள் -இந்த கள்ள சாராயத்தை இலவசமாக கொடுத்து இருப்பார்களோ. சீமை சரக்கு அதிகாரிகள் / அமைச்சர்கள் / சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான்.. பொது மக்களுக்கு கள்ள சாராயம் தான் - விடியல் ஆட்சியின் மற்றும் ஒரு சாதனை


Vijay D Ratnam
ஜூன் 21, 2024 13:46

மாசாமாசம் நடக்கும் பெட்டி சப்ளையை கெடுத்துக்கொள்ளுமா கூட்டணி கட்சிகள்


மோகனசுந்தரம்
ஜூன் 21, 2024 12:40

பழனி, இதையெல்லாம் கூறுவதற்கு நீங்க ஒன்றும் யோக்கியன் இல்லை


Ms Mahadevan Mahadevan
ஜூன் 21, 2024 12:21

இவர் சொல்லுவது சரிதான். எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி கட்சிகளும் மதுகிழக்கை அமுல் படுத்த ஓங்கி குரல் எழுப்ப வேண்டும்


MADHAVAN
ஜூன் 21, 2024 12:12

கள்ளச்சாராயம் என்பது விஷத்துக்கு சமம், அது தெரிஞ்சும் குடிச்சு சாவுறானுங்க, அதுக்கு எதுக்கு 10 லட்சம், அவனுங்க சேதத்துக்கு காரணமான குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை குடுங்க,


MADHAVAN
ஜூன் 21, 2024 12:07

2020 ல உன் ஆட்சில கள்ளச்சாராயம் குடிச்சு செத்தபோது நீ ராஜினாமா பண்ணிட்டு போனியா பழனிச்சாமி? வக்கணையா உக்காந்துதானே இருந்த ? கள்ளச்சாராயம் விஷம் னு தெரிஞ்சு குடிச்சு செத்த பாவிகளுக்கு வாக்களதுவாங்குறிய பழனிச்சாமி ?


Senthil K
ஜூன் 21, 2024 12:36

2020 ல் எந்த ஊரில்.. எந்தனை பேர் கள்ளச் சாராயம் குடித்து இறந்தனர்??? தகவல் தரவும்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை