உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருவாரூரில் ரூ.50 கோடியில் ஆடை தயாரிப்பு மையம்

 திருவாரூரில் ரூ.50 கோடியில் ஆடை தயாரிப்பு மையம்

சென்னை :திருவாரூர் மாவட்டத்தில், எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், 50 கோடி ரூபாய் முதலீட்டில் ஆடை தயாரிப்பு யூனிட் அமைக்க, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜவுளி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் குழுமத்தின், துணை நிறுவனமான எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அதாவது தி சென்னை சில்க்ஸ், ஆடை தயாரிக்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆடை தயாரிப்பு யூனிட் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண் ராய் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை