உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்கள்: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சிறுமியை கடித்து குதறிய வெளிநாட்டு நாய்கள்: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரகு. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியாக வேலை செய்கிறார். மனைவி சோனியா, ஐந்து வயது மகள் சுரக் ஷாவுடன் பூங்காவில் உள்ள சிறிய அறையில் வசிக்கின்றனர். உறவினர் மரணத்துக்காக ரகு சொந்த ஊர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலையில் பூங்கா எதிரே வசிக்கும் புகழேந்தி என்பவர், தனது இரண்டு 'ராட்வைலர்' ரக நாய்களுடன் பூங்காவிற்கு வாக் வந்துள்ளார். நாய்களை சங்கிலியால் கட்டாமல் விட்டிருக்கிறார்.திடீரென அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சுரக் ஷாவை, இரண்டு நாய்களும் பாய்ந்து கடித்தன. கை, கால், தலை என உடல் முழுதும் கடித்ததில் ரத்தம் கொட்டியது. சிறுமியின் தலையை கடித்து இழுத்ததில், தலைமுடியோடு சேர்ந்து மண்டையோட்டு தோல் பிய்ந்து தொங்கியது. குழந்தையை காப்பாற்ற ஓடிவந்த தாய் சோனியாவையும், நாய்கள் கடித்தன. இருவரின் அலறல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், நாய்களை விரட்டி இருவரையும் மீட்டனர். இந்த களேபரத்தில் நாய்களின் உரிமையாளர் நழுவி விட்டதாக மக்கள் கூறினர். சிறுமியை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி, சிறுமியை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க நாய் உரிமையாளர் ஏற்பாடு செய்தார். உரிமையாளர் புகழேந்தி, 63, மனைவி தனலட்சுமி, 59, மகன் வெங்கடேஸ்வரன், 30 ஆகியோரை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 289 பிரிவு - பிறர் வளர்க்கும் விலங்கு பிறரை கடித்தோ அல்லது ஏதேனும் செயல் செய்தோ தீங்கு விளைவித்தல்; 336 - மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்தல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மூவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். வீட்டின் கதவு திறந்திருந்ததால், நாய்கள் வீட்டில் இருந்து வெளியேறி, பூங்கா சென்று சிறுமியை கடித்ததாக, காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.இரண்டு நாய்களும், உரிமையாளரின் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளன. இவற்றை, என்.ஜி.ஓ.,க்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர். ராட்வைய்லர், பிட்புல், டெர்ரியர் உள்ளிட்ட 27 அன்னிய இன நாய்களை வளர்க்க, மத்திய அரசு மார்ச் மாதம் தடை விதித்தது. டில்லி ஐகோர்ட் அதை ரத்து செய்தது. ஆனால், மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது அவசியம்.

உயிருக்கு ஆபத்தில்லை

சிறுமியை கடித்த ராட்வைலர் நாய்கள் உரிமம் பெறாமல் வளர்க்கப்பட்டுள்ளன. உரிமையாளருக்கு மாநகராட்சி 'நோட்டீஸ்' கொடுத்துள்ளது. சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை. உரிமம் பெறாமல் செல்லப்பிராணி வளர்ப்போர் விபரம் சேகரிக்கப்படும். சம்பவம் குறித்து, கால்நடைதுறையுடன் ஆலோசித்து அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படும்.- ஜெ.ராதாகிருஷ்ணன்கமிஷனர், சென்னை மாநகராட்சி

விதிமுறை என்ன?

செல்லப் பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. அவை பொது இடங்களில் அசுத்தம் செய்யாமலும், பிறருக்கு தீங்கு விளைவிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டியதுஉரிமையாளரின் பொறுப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

indian
மே 08, 2024 16:03

நான் பல வருடங்கள் ஆக தினமலர் நாளிதழ் படிக்கிறேன் உண்மையாக உள்ள நாளிதழ் இந்த தினமலர் மட்டும் சதவிதம் உண்மை நாய் வளர்க்க தமிழக அரசு தடை உடனே அமல் படுத்த வேண்டும் நாய் வளர்த்தால் தூக்கு தண்டனை தரனும் எல்லா நாயை கருனை கொல செய்ய வேண்டும் அப்பொழுது நாய் வளர்க்க பயபடுவார்கள் நன்றி வணக்கம்


indian
மே 08, 2024 15:55

முதலில் வீடு வீடாக செக் செய்யனும் பின்பு நாய் ஒனருக்கு தூக்கு தண்டனை தரனும் அப்பதான் எவனும் நாய் ரோடுல கூட்டிட்டு போகமட்டாங்க தமிழ்நாட்ல நாய் வளர்க்க மூமு தடை விதிக்கனும் திருடன் கொல்ல இருந்த கேமரா வையுங்க அத விட்டு போட்டு நாய் வளர்க்க கூடாது உடனேஅரசு தடை எல்லா நாய் பிடித்து கருனை கொலை செய்யனும் இல்லனா நாட்ல குழந்தைங்க செத்திக்கிட்டு தான இருக்கும்


M Ramachandran
மே 07, 2024 10:45

இதெல்லாம் ஜுஜுபி சில லகரங்களை குடும்பத்திற்கு சமர்ப்பித்தால் கேசு அம்போ


veeramani
மே 07, 2024 10:15

முதலில் மனிதர்களுக்கு தீங்கு செய்கின்ற எந்த விலங்குகளையும் சுட்டு கொள்ளவேண்டும் ஒரு சிறிய என் குழந்தையை கடிக்கின்ற எந்த நாய்கள் பிற மனிதர்களையும் கடிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் நாய்க்களின் உரிமையாளரை முதலில் கடும் சிறை தண்டனை கொடுக்கப்படவேண்டும் இவருக்கு வேண்டுமானால் நாய்கள் வளர்ப்புப்பிராணிகள் மற்றவர்களுக்கு கடிக்கும் விலங்குகள் இந்த அவர் எந்த பதவியில் இருந்தாலும் நாய்களை உடனடியாக சுட்டுக்கொள்ளவேண்டும்


V RAMASWAMY
மே 07, 2024 08:54

சட்டங்கள் மிகவும் சீரும் சிறப்புமாக செயல்படுத்தப்படும், பின்பற்றப்படும் சிங்கப்பூரில் நாய் வளர்ப்பு பற்றி மிக கடுமையான நியதிகள் உள்ளன வெளியில் அழைத்துப்போகும்போது கழிவு செய்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி உரிய கழிவு தொட்டியில் போடவேண்டியது நாய் வளர்ப்பவரின் கடமை, மீறினால் கடும் தண்டனை இந்தியாவில் எப்பொழுது சட்டங்கள் கடுமையாக செயல் படடுத்த்தப்படும், pinparrappatum?


Barakat Ali
மே 07, 2024 07:08

விடியல் ன்னு நம்பி ஒட்டு போட்டவங்களும் இதே மாதிரிதான் அவஸ்தை படுறாங்க பூங்காவுக்கு கூட்டிக்கிட்டு வரலை அதுங்களே வீட்டுலேர்ந்து தப்பிச்சு வந்துட்டுதுங்க என்று சொல்வதைப்போலத்தான் "மக்கள்தான் எங்களை தேர்ந்தெடுத்திருக்காங்க ஆளுநர் உட்பட யாரும் கேள்வி கேட்கக்கூடாது" என்று சொல்லப்படுகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை