உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் குழந்தைகள் தினம் பள்ளிகளில் கடைப்பிடிப்பு

பெண் குழந்தைகள் தினம் பள்ளிகளில் கடைப்பிடிப்பு

சென்னை:தேசிய பெண் குழந்தைகள் தினமான நேற்று, அவர்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் நடத்தப்பட்டன.ஒவ்வொரு ஆண்டும் ஜன., 24ம் தேதி பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவியருக்கு இனிப்பு வழங்கினர். மாணவர்கள் அனைவரும் இணைந்து, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து உறுதிமொழி ஏற்க வைத்தனர்.இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பெண் குழந்தைகள் தினமான நேற்று, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கையாள்வது, இணையதளத்தின் வாயிலாக நடக்கும், பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.வளரிளம் பருவத்தில் ஏற்படும், இயல்பான மனக்குழப்பங்களை கையாளும் முறைகள், தேர்வை எதிர்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழுவை சந்திக்க வேண்டும் எனக் கூறினோம். மாணவர்களிடம், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வலியுறுத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை