உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுசு புதுசா திட்டம் போடுங்க: மாநில திட்டக்குழுவுக்கு முதல்வர் அறிவுரை

புதுசு புதுசா திட்டம் போடுங்க: மாநில திட்டக்குழுவுக்கு முதல்வர் அறிவுரை

சென்னை: ‛‛ மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள், சிந்தனைகளை உருவாக்கித் தாருங்கள்'' என, மாநில திட்டக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள், சிந்தனைகளை உருவாக்கித் தாருங்கள்; ஏற்கனவே உள்ள திட்டங்களை இன்னும் மேம்படுத்தவும் ஆலோசனை தாருங்கள். காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளது.எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். அரசின் திட்டங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்தி உள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.மாநில திட்டக்குழு அறிக்கை தான் திமுக., ஆட்சியின் மார்க் ஷீட். கவனம் பெறாத துறைகளை சரி பார்த்து திட்டங்களை தயாரித்து தர வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் என்பது பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் சமூக ரீதியிலும் இருக்கக்கூடாது.பசியில்லை, வறுமையில்லை, பள்ளிகள், குடிநீர் இல்லா இடங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். சாலை, மின்சாரம், பள்ளிகள் இல்லாத இடங்கள் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் அனைத்து வளங்களும் உள்ளன என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கிறோம். நிதிவளம் இருக்குமானால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் நிதிவளம் பெருக்க ஆலோசனை தர வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

சுலைமான்
ஆக 07, 2024 09:01

புதிய திட்டங்களை போடுங்கள்.... ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள திமுக மக்களவை உறுப்பினர்களான ஆ.ராசா - கனிமொழி, தயாநிதிமாறன் போன்றோறை சிறையில் அடையுங்கள்.


Radja
ஆக 06, 2024 20:28

அப்போதான் நாங்கள் கொள்ளை அடிக்க முடியும்.


M Ramachandran
ஆக 06, 2024 20:25

சீமான் வருகையால் கோவலு வாலருந்த.. சத்தம் போட முடியாமல் கொண்டு கிடைக்கும் ஓசி போண்டா பஜ்ஜியை டீயய் ருசித்து கொண்டு கால் அடியில் வாலை சுருட்டி கொண்டு கடைசி நாட்களய் எண்ணி கொண்டிருக்கு


M Ramachandran
ஆக 06, 2024 20:18

ஜால்ரா கோவாலு இப்போர் டான்சு கோவாலு ஆகி மாறி போச்சு. ஆரம்ப சூர தணம் இப்போ கால் பிடிக்கும் சூர தனமாகி தீ மு க்கா அடகு கடையில் தூங்கி கொண்டிருக்கு


Ramesh Sargam
ஆக 06, 2024 20:05

ஒரேமாதிரியாக கொள்ளையடித்து சலித்துப்போய்விட்டதாம். ஆகையால் புதுசுபுதுசா திட்டம் போட சொல்கிறார் தலைவர்.


M Ramachandran
ஆக 06, 2024 19:39

மக்கள் அரசு பணத்தைய்ய கொள்ளை யடிக்க புது புதுசா திட்டம் போடுங்க


adalarasan
ஆக 06, 2024 19:33

திட்டம் ஆலா பல போடலாம் ? அதே சமயம் அவைகளை சரியாக செயல் படுத்த வேண்டும் ? பணம் வீணடிக்கப்படக்கூடாது??


sridhar
ஆக 06, 2024 18:55

ஒரே திட்டம் போதும், எல்லா குடும்பங்களையும் பணத்தால் அடியுங்க , மக்கள் எல்லா குறையையும் மறந்துடுவாங்க .


கிரண்
ஆக 06, 2024 18:08

அந்தக் காலத்தில் விஞ்ஞான முறையில் வீராணம், மஸ்டர் ரோல், பூச்சிமருந்து திட்டமெல்லாம் தீட்டிக்.குடுத்தாங்க கோவாலு. குடும்பம் நல்லா முன்னேறிச்சு கோவாலு.


PARTHASARATHI J S
ஆக 06, 2024 17:57

இருக்கும் திட்டங்களை மேம்படுத்துங்கள். ரோடு சரியா போடுங்க. ஊழல் அற்ற நிர்வாகம் தாருங்கள். புது திட்டத்திற்கு கலைஞர் பெயர் வேண்டாம். லேப்டாப் திட்டம் கொடுங்க. வீடுதோறும் மழைநீர் வடிகால் அமைய ₹5000 மானியமாக தாருங்கள். சோலார் பேனல் போட்டு மின்வாரிய செலவை குறைக்கலாம். ₹1 லட்சம் மானியம் தரலாம். அரசாங்கத்திடம் பணம் இல்லையென்றால் திமுகவே தரலாம். இது எதுவுமே பண்ணலேனா ஹசினா மாதீரி இரவோடு இரவாய் ஓடிப்போகவும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ