தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு; ஒரு சவரன் ரூ.94,160!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் இன்று (நவ.,27) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவ.,25) ஆபரண தங்கம் கிராம், 11,720 ரூபாய்க்கும், சவரன், 93,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,26) தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 11,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 94,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 176 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (நவ.,27) 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.