மேலும் செய்திகள்
மலேஷியாவில் மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம்: பாதைகளை அடைத்ததால் பரிதவித்த மக்கள்
2 hour(s) ago | 2
தமிழக அரசுக்கு தண்டனை வழங்கணும்
2 hour(s) ago | 1
சென்னை: சென்னையில் இன்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,03)ஆபரண தங்கம் கிராம் 12,060 ரூபாய்க்கும், சவரன் 96,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 201 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,04) தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 12,020 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் சரிவடைந்து, 96,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 200 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று (டிச.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.196க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2 hour(s) ago
2 hour(s) ago | 2
2 hour(s) ago | 1