உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து புதிய உச்சம்

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து புதிய உச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 10) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=acfqrog5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று (டிசம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250க்கு விற்பனை ஆகிறது.இன்று மதியம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை ஆனது. கிராம் ரூ.12,370க்கு விற்பனை ஆகிறது.அதேபோல் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சம் அடைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கி வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தங்கம் விலையின் கடந்த கால நிலவரங்களை அறிய, இங்கே கிளிக் செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

karthik
டிச 12, 2025 17:25

அதென்னடா நம்நாட்டில்? உலகம் முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து தான் வருகிறது


அப்பாவி
டிச 12, 2025 13:21

வளர்ச்சி அமோகம். நாம இப்பவே வல்லரசு. மெடல் எங்கே?


RAVINDRAN.G
டிச 12, 2025 11:14

எவ்வளவு விலைக்கு விற்றால் என்ன ? வாங்கினாதானே அதைப்பற்றி கவலைப்படணும்


தியாகு
டிச 12, 2025 10:50

போட்டோவில் ஆசையாய் நகைகளை பார்க்கும் பெண்மணிகளே, தங்களிடம் இருக்கும் தங்கத்தை பார்த்து பத்திரமாக வைத்துக்கொள்ளவும். இல்லனா கட்டுமர திருட்டு திமுகவினர் உங்களுக்கு தெரியாமல் நீங்கள் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டுவிடுவார்கள்.


திகழ்ஓவியன்
டிச 12, 2025 11:20

இந்தியா ரூபாய் டாலர் மதிப்பில் உச்சம், தங்கம் விலை உச்சம் , வெள்ளி விலை உச்சமோ உச்சம் இதை எதையும் கண்டுக்காத அரசு இதில் டாலர் மதிப்பு 60 க்கு கொண்டு வருவேன் என்று பீத்தல் 15 வருடம் ஆகுது


தியாகு
டிச 12, 2025 11:49

கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையில் இன்னமும் பத்து மோடிஜி வந்தாலும் இந்தியாவை காப்பாற்ற முடியாது. மோடிஜி இந்தியாவை ஒரு அடி ஏற்றிவிட்டால் கட்டுமர திருட்டு திமுக போன்ற கட்சிகள் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் இரண்டு அடி இறக்கி விடுறானுங்க. என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு இப்போ திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்குமே. ஹி....ஹி....ஹி...


ஆரூர் ரங்
டிச 12, 2025 10:37

இறக்குமதிப் பொருட்கள் வாங்குவதை இயன்றவரை தவிர்க்கவும். ரூபாய் மதிப்பு குறைவது தடுக்கப்படும்.


திகழ்ஓவியன்
டிச 12, 2025 11:21

கம்பி கட்டுங்கள், அம்மன் ஸ்டீல் வாங்கி கட்டுங்கள், ஆள தெரியாத கூட்டம், ஸ்டேஜ் சரியில்லை கதை தான்


JAYACHANDRAN RAMAKRISHNAN
டிச 12, 2025 09:53

வகையாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் கணக்கிட்டால் ரூபாய் ஒரு இலட்சத்து இருபதாயிரம் வரையில் இப்போதே இருக்கும்.


சமீபத்திய செய்தி