உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு

ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு

சென்னை: ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகரித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. கடந்த இரு தினங்களாக எந்த மாற்றமும் நிகழாமல் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,240 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது.இதன்மூலம் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.142க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம், வெள்ளி விலை மாறி மாறி புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Siva Subramaniam
செப் 12, 2025 20:48

Must cross ONE LAKH before December 2025


sivakumar Thappali Krishnamoorthy
செப் 12, 2025 10:42

ஆபரண பிரியர்கள்.. வாவ் .. இனி அரசியல்வாதிகள் பெயர் .. ஆட்சி பிரியர்கள் என்றெ அழைக்க படுவார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை