உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் உயரும் தங்கம் விலை: 3 நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகம்

மீண்டும் உயரும் தங்கம் விலை: 3 நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகம்

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.54,200க்கு விற்பனை ஆகிறது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது.சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமையில் ரூ.53,240 ஆக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 29) சவரனுக்கு ரூ.54,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.6,775க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளியின் விலை இதுவரையில் இல்லாத அளவாக ரூ.102.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,200க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட ரூ.1,200 அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ