| ADDED : மார் 05, 2024 10:12 AM
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை முதன் முறையாக, 6,000 ரூபாயை தாண்டியது.கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச். 5) சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 85 உயர்ந்து ரூ.6, 015க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து இருப்பது, சாதாரண மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளி விலை எவ்வளவு?
வெள்ளியின் விலை கிராமிற்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.76.90 ஆகவும், வெள்ளி ஒரு கிலோ ரூ. 76,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.