உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 அதிகரிப்பு

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 அதிகரித்துள்ளது.தமிழகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய முன்தினம் சவரன் ரூ.840 அதிகரித்து, ரூ.72160 ஆக விற்பனையானது. நேற்று (ஜூலை 02) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,520க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9065க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

renga rajan
ஜூலை 03, 2025 13:47

சம்பந்தமே இல்லாமல் ஏறுவதும் இறங்குவதும் மேல்தட்டு அரசியல் வாதிகள் மற்றும் மேல்தட்டு தொழில் அதிபர்கள் தான் ஏதோ விளையாடுகிறார்கள் அவர்கள் கொள்ளை அடிக்க.


Nada Rajan
ஜூலை 03, 2025 11:44

இது ரொம்ப தவறாச்சு தங்கம் விலை குறையணுமே


Nada Rajan
ஜூலை 03, 2025 11:43

இது என்னங்க தங்கம் மறுபடியும் ஏறு முகத்தில் சென்று இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை