சென்னை: சென்னையில் இன்று (அக் 29) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று மாலை ரூ.920 அதிகரித்துள்ளது. இதனால், ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகின்றன. இம்மாதம், 17ம் தேதி, உச்சபட்சமாக 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,200 ரூபாயாகவும், சவரன், 97,600 ரூபாயாகவும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xdlbycjp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 27) தங்கம் கிராம், 11,450 ரூபாய்க்கும், சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக் 28) காலை தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 3,000 ரூபாய் குறைந்தது. இன்று (அக் 29) காலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று மாலையும் தங்கம் விலை ரூ.920 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.90,600க்கும், கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ரூ.11,325க்கும் விற்பனையாகிறது.ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,000 அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.இன்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாலையில் எந்த மாற்றமும் இல்லை.