உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 22ல் அரசு விடுமுறை: பா.ஜ., கோரிக்கை

தமிழகத்தில் 22ல் அரசு விடுமுறை: பா.ஜ., கோரிக்கை

சென்னை : உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று, மத்திய அரசின் அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அதை பின்பற்றி, 22ம் தேதி பல மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன. எனவே, தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்குமாறு அரசுக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்த அறிக்கை: ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த நுாற்றாண்டின் மகத்தான நிகழ்வை, தமிழக மக்கள் கண்டு களித்து, இறைவன் ராமர் அருள் பெற, முதல்வர் ஸ்டாலின் விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

நரேந்திர பாரதி
ஜன 21, 2024 04:11

நல்ல நாள்லயே ஒழுங்கா வேலை பார்க்க மாட்டானுவோ..இதுல இன்னும் விடுமுறை வேற


Ramesh Sargam
ஜன 21, 2024 00:30

தமிழக அரசு பொது விடுமுறை அறிவிக்காவிட்டாலும் பரவாயில்லை, ராம பக்தர்கள் loss of pay -இல் விடுமுறை எடுத்து அன்றைய தினத்தை கொண்டாடுவோம். நீ யார் விடுமுறை கொடுப்பதற்கு?


Siddhanatha Boobathi
ஜன 20, 2024 22:52

தமிழக பாரதிய ஜனதா வாசகர்கள் எல்லோருக்கும் ஏதோ ஆகிவிட்டது


Vaidheesvaran Ramakrishnan
ஜன 20, 2024 22:45

ஆக திங்கட்கிழமை அன்று எல்லோரும் ஒரு இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது


venugopal s
ஜன 20, 2024 20:20

பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மஹாராஷ்டிரா மாநிலங்களிலேயே விடுமுறை அறிவிக்காத போது இங்கு தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்க இவருக்கு வெட்கமாக இல்லையா?


abdulrahim
ஜன 20, 2024 17:28

அரை நாள் லீவா ஏன்னா ஆலய குடமுழுகுக்கு அரைநாள் தான்


VARUN
ஜன 20, 2024 14:29

இந்த பிஜேபிகரங்களுக்கு ரங்களுக்கு வேறா வேலையேல்ல,


ஆரூர் ரங்
ஜன 20, 2024 14:17

அரேபிய நாடுகளிலேயே விடுமுறை கிடையாது. இங்கு மட்டும் வாக்கு வங்கிக்காக ????உண்டு.


Vaduvooraan
ஜன 20, 2024 12:04

அடுத்ததாக பக்கத்துலயே மசூதி வருது இல்ல..அப்போ லீவு கொடுத்து ஈடு கட்டி மதச்சார்பின்மையையும் காப்பாத்திட்டா போச்சு


ஜெகன்
ஜன 20, 2024 10:06

எதுக்கு விடுமுறை


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை