உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு திட்டங்கள் சுய விளம்பரத்திற்கு அல்ல: பா.ஜ., : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

அரசு திட்டங்கள் சுய விளம்பரத்திற்கு அல்ல: பா.ஜ., : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, கட்சி விளம்பர பாணியில், 'ஸ்டாலின்' பெயரை பயன்படுத்தக் கூடாது என்ற தீர்ப்பை வழங்கியதன் வாயிலாக, மக்கள் பணத்தில் தி.மு.க., அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., சண்முகம் தொடர்ந்த வழக்கில் கிடைத்த இந்த தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படும் நலத்திட்டங்களில் எல்லாம், 'ஸ்டாலின்' என்று தன் பெயரை, 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்ளும் முதல்வர், அரசு திட்டங்கள் மக்கள் நலனை மேம்படுத்துவதற்கு தானே தவிர, சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை இனியாவது உணர வேண்டும். மேலும், சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் திட்டங்களுக்கு, 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' என்று விளம்பர அரசியலை மனதில் வைத்து சூட்டிய பெயரை, உடனே நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்கி, தமிழக அரசு நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை