நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஆதரவளிக்க வேண்டும் * அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை:'தமிழகத்தில் மேற்கொள்ளப்படும், தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தின் ராணிப்பேட்டை மற்றும் ஆந்திராவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு, 1,328 கோடி ரூபாயை அனுமதித்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக மக்களின் சார்பில் நன்றி. 'பாரத்மாலா பரியோஜனா' திட்டம் துவங்கியதில் இருந்து, பிரதமர் மோடி தமிழகத்திற்கு, 2,414 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். மாநில அரசின் ஆதரவு இல்லாததால், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் தாமதமாகி வருகின்றன.எனவே, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தேவைப்படும் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.