உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு

புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு

சென்னை: தமிழக தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை நியமித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்களுடன் இந்த ஆணையம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. மாநில தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை தேர்வு செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய மாநில தகவல் ஆணையர்களின் நியமனத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V Venkatachalam
ஜூன் 26, 2025 21:26

ஒரு விஷயம் பட்டவர்த்தனமா தெரிஞ்சு போச்சு. இன்னும் மூணு வருஷத்துக்கு திருட்டு தீயமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை பற்றி எவனும் உண்மையை தெரிந்து கொள்ள முடியாது ‌கவர்னர் ரவி அவர்கள் இவர்களுக்கு ஒப்புதல் கொடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது.


sankaranarayanan
ஜூன் 18, 2025 19:16

அதெப்படி அசெம்பளியில் திராவிட மாடல் அரசு ஒரு மசோதாவும் கொண்டு வராமல் இது போன்று செய்ய முடியுமா? நாங்கள் உச்ச நீதி மன்றம் செல்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை