மேலும் செய்திகள்
ஜாதி, நிறம், மதம் பார்த்து ஓட்டு போடக்கூடாது: சீமான் வேண்டுகோள்
3 hour(s) ago | 20
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.பல்கலை அரங்கில் நடந்த விழாவில் துணைவேந்தர் க.ரவி வரவேற்றார். கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குனர் வீ.காமகோடி, பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன், தேர்வாணையர் ஜோதிபாசு, ஆட்சிக் குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், ராஜாராம், பழனிசாமி சேகர் மற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். விழாவில் 40 ஆயிரத்து 412 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அப்துல் கலாம்சிலை திறப்பு
தொடர்ந்து சிக்ரியில் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்ட பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். பின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு
விழாவில் ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி பேசியதாவது: உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதில் 70 சதவீதம் இளைஞர்கள் கிராமங்களில் உள்ளனர். கிராம இளைஞர்களின் பயன்படுத்தப்படாத அறிவாற்றல் முறையாக பயன்படுத்தப்படும் போது அனைவரையும் உள்ளடக்கிய தேச வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அடுத்த 23 ஆண்டுகளில் இந்தியா 100 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது முழு பங்களிப்பை வழங்கி நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.மேலும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் எனப்படும் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ட் அண்ட் டேட்டா சயின்ஸ் துறையின் எதிர்கால வளர்ச்சி, வேலை வாய்ப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். மேலும் அவர், ''வரும் கல்வியாண்டில் இருந்து சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவர் சேர்க்கையில் விளையாட்டில் மாணவர்களின் செயல்பாடு கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு விளையாட்டுத்துறைக்கு என பிரத்யேக இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்,'' என்றார். அமைச்சர் புறக்கணிப்பு
இவ்விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளவில்லை.
3 hour(s) ago | 20