உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலுக்காக வன்மத்தை பதிவிட்ட கவர்னர்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியலுக்காக வன்மத்தை பதிவிட்ட கவர்னர்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்கு அரசியலே காரணம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.,வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டில்லி முதல் தமிழகத்தில் உள்ள பா.ஜ.,வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டி

ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி மட்டுமல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.,வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.,வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நியமன பதவியில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார். கோதண்டராமர் கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

பக்தியா? பகல் வேடமா?

தமிழக மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல், காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பா.ஜ., தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் கோயிலில் போய் கவர்னர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

உண்மையான பக்தர்கள்

தமிழகத்தின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள், ஈ.வெ.ரா.,வின் தத்துவங்களையும் போற்றுவார்கள், பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற திமுக.,வின் அரசியல் எதிரிகளும், தமிழகத்தின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், திமுக.,வின் தொண்டர்கள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 86 )

Milirvan
ஜன 26, 2024 16:06

ஹை.. உஜாரா தமிழக பக்தர்கள்'ன்னு ஒரு உருட்டு .. அவர்கள் ஹிந்துக்கள் இல்லீயாம்.. கூடவே பஜனை பண்ராங்க'ன்னுட்டும் நக்கல் பேச்சு வேற.. திருந்தாத ஜென்மம்..


Milirvan
ஜன 26, 2024 15:56

அதான் பெரிய காலர் இருக்கே? தூக்கி விட்டுகிட்டு, தொட்டுப்பார்... சீண்டிப்பார்.. என்று வாய் சவடால் விட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு யோக்கியனை போன்ற பேச்சுக்கு காரணம் என்னவோ? பிஜேபி ஊமைக்குத்து ரொம்ப வலிக்குது போல..


Hari
ஜன 25, 2024 17:02

பெரிய அறிக்கை விடுகிறார் ஆமா


Arachi
ஜன 23, 2024 13:57

நன்றாக இருந்த இந்தியா தனிமனிதனின் சுதந்திரம் குறிப்பாக நல்லிணக்கத்தோடு இருக்கும் தமிழ் நாட்டில் மறைமுகமாக மதக் கலவரத்தை தூண்டிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஆளுநரின் சமீபத்திய கற்பனை இதை உறுதி செய்திருக்கிறது. இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு வழிவகுத்தது விடுகிறார்கள் சில கபோதிகள்.


S.V.Srinivasan
ஜன 23, 2024 12:42

இவர் என்னவோ தான் வகிக்கும் பதவிக்கு ஏற்ற மாதிரி பேசற மாதிரியும் ஆளுநர் அரசியல் பேசுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மத்திய அரசிடம் பேரிடர் உதவி கேட்கும்போது இவர் மகன் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என்று நிதி அமைச்சரிடம் மரியாதை குறைவாக பேசியத்தையெல்லாம் கண்டிக்க மாட்டாராம். தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறக்கப்படும் நிகழ்ச்சியின் பொது எந்த விதமான பூஜையும் செய்யக்கூடாது அயோத்தியிலிருந்து ஒளிபரப்பாகும் காணொளி காட்சியை தமிழகத்தில் கோவில்களில் ஒளி பரப்பக்கூடாது என்று வாய் வழி உத்தரவெல்லாம் எந்த ரகத்த்தில் சேரும் என்று தெரியவில்லை.


Narayanan
ஜன 23, 2024 10:49

ஸ்டாலினுக்கு பொய்ச்சொல்வது சர்வசாதாரணம் .நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரில் நடந்ததை சொல்லும்போதுகூட இல்லவே இல்லை என்று சொல்கிறார் என்றால் எப்படிப்பட்டவர் ?


Sri Giridhari Dasa
ஜன 23, 2024 10:40

நேற்று காலை ஸ்ரீரங்கத்தில், நாங்கள் ஒரு எட்டு பேர் ராமாயணம் பாராயணம் செய்தபடி, ஸ்ரீரங்கத்தின் உள்வீதிகளான சித்திரை, உத்தர வீதிகளை பிரதட்சணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் பதினைந்து போலிஸார் வந்து எங்களைத் தடுத்து நிறுத்தினர். நாங்கள் வேறு வழியின்றி கோயிலுக்குள் சென்று பாடினோம். மோடி வந்த இரண்டாம் நாள் ஸ்ரீரங்கத்தில் இவ்வாறு நடந்தது. எதுவும் சொல்வதற்கில்லை. அழிவைத் தேடிக் கொண்டுள்ளது தமிழக அரசு. ஆனால், கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் இப்படி அறிக்கை கொடுப்பதற்கு எப்படித்தான் முதல்வருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை. ஏமாற்றுத்தனத்தின் உச்சகட்டம்.


Siva
ஜன 26, 2024 17:28

பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடுபவனை சொல்லணும் .. இப்படி ஒரு ஆட்சியை தேர்தெடுத்ததற்கு


ramesh
ஜன 23, 2024 10:04

பொறுப்பான பதவியில் இருப்பவர் போட்டி இட்டு வெற்றி பெற முடியாது என்று நினைத்தால் அரசியல் பேசாமல் இருக்க வேண்டும்


Siva
ஜன 26, 2024 17:30

பணம் கொடுக்காமல் திமுகவை போட்டி போட சொல்லுங்கள் பார்ப்போம் ..5 % மேல் ஒட்டு விழாது


makesh
ஜன 23, 2024 09:22

தமிழகத்தின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபடுவார்கள், ஈ.வெ.ரா.,வின் தத்துவங்களையும் போற்றுவார்கள்.


ramesh
ஜன 23, 2024 10:05

இப்படி பட்டவன் தான் உண்மையான இந்து


SIVA
ஜன 23, 2024 08:43

இந்த உலகத்தில் நாம் அடித்தால் திருப்பி அடிக்காதவர்கள் மூன்று பேர் ஒன்னு பிள்ளயார் கோயில் பூசாரி என்று ஒரு வசனம் வரும் .....


மேலும் செய்திகள்



புதிய வீடியோ