உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 23ல் கிராம சபை கூட்டம்

வரும் 23ல் கிராம சபை கூட்டம்

சென்னை:ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடத்தப்படும் என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள், ஜன., 26 குடியரசு தினம்; மார்ச் 22 உலக தண்ணீர் தினம்; மே 1 தொழிலாளர் தினம்; ஆக., 15 சுதந்திர தினம்; அக்., 2 காந்தி பிறந்த தினம்; நவ., 1 உள்ளாட்சிகள் தினம் ஆகிய ஆறு நாட்களில் நடத்தப்படுகின்றன.இவற்றில், நவம்பர் 1ல் உள்ளாட்சிகள் தினத்தில் நடக்கவிருந்த கிராம சபை கூட்டங்கள், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, வரும் 23ம் தேதி காலை 11:00 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என்றும், கிராம சபை கூட்டம் நடக்கும் இடம், நேரம் போன்றவற்றை முன்கூட்டியே அக்கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி