உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்

பாட்டிகளின் வடை கடை வரலாற்றில் மட்டுமே இருக்கும்

சென்னை : 'கிராமங்களில் இட்லி, டீக்கடைகளுக்கு கட்டாய உரிமம் பெறுவது, ஏழைகள் மீதான தாக்குதல்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லி கடை, டீ கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தி தொழில்கள்; தையல், சலவை கடைகள் போன்ற 119 வகையான சேவை தொழில் செய்வதற்கும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வாழ்வாதாரத்திற்கான தொழில், வணிகத்திற்கு உரிமம் பெற வேண்டும் என்பது, ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல். கிராமங்களில் வீட்டின் ஒரு பகுதியில் டீக்கடை, பெட்டிக்கடை வைத்திருப்பர். ஆதரவற்ற மூதாட்டிகள், இட்லி, வடை சுட்டு விற்பர். இதற்கும் உரிமம் பெற வேண்டும் என்பது பெரும் அநீதி. வீடுகளில் சிறிய அளவில் நடத்தப்படும் பெட்டிக்கடை, இட்லிக்கடை ஆகியவற்றுக்கு உரிமம் பெறப்பட்டால், அந்த வீட்டுக்கான மின் இணைப்பை, வணிக இணைப்பாக மின் வாரியம் மாற்றும். இந்த உரிமத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 'பாட்டிகளின் வடை கடைகள்' வரலாற்றில் மட்டுமே இருக்கும். எனவே, கிரா மப்புற பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய வகையில் சிறிய கடைகளுக்கும் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை