உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 35 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

35 மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

சென்னை: தொடர் பயன்பாடு காரணமாக தமிழகத்தில், 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.நீர்வளத்துறையின் கீழ் மாநில நீர்வள ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.இதற்காக, சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், நிலத்தடி நீர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை தவிர்த்து, 35 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம், 1 மீட்டருக்கு கீழ் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கோடை காலம் தீவிரம் அடைவதற்கு முன்பே, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது.இதனால், பல மாவட்டங்களில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கும் அபாயம் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி