உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

வரும் மாதங்களிலாவது வருண பகவான் மனசு வைக்கணும்; நிலத்தடி நீர் மட்டம் 20 மாவட்டங்களில் உயர்வு; 16ல் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. 16 மாவட்டங்களில் லேசான சரிவை சந்தித்துள்ளது.

நிலத்தடி நீர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் எப்படி இருக்கிறது என்பதை நீர் வளத்துறையினர் ஆய்வு செய்கின்றனர். துறை கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, ஜூன் மாதத்தை காட்டிலும், 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது; 16 மாவட்டங்களில் சரிந்துள்ளது.

அதிகரிப்பு

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூரில் 0.79 மீட்டர், நாமக்கல்லில் 0.69 மீட்டர், திருவள்ளூரில் 0.61 மீட்டர் அதிகரித்துள்ளது.தர்மபுரி, கடலுார், தஞ்சாவூர், நாகை, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிந்துள்ளது.

வருண பகவான்

அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 0.71 மீட்டர், துாத்துக்குடி, பெரம்பலுார், தர்மபுரி மாவட்டங்களில் தலா 0.50 மீட்டரும், நீர் மட்டம் சரிந்துள்ளது. தமிழகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொழியும். இம்மாதத்திலும் துவக்கம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது; வரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது. 'வருண பகவான் மனது வைத்தால் தான் நீர் வளம் குறையாமல் காக்க முடியும்' என்கின்றனர், விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sridhar
ஆக 20, 2024 19:12

ஏரி , குளங்கள் மூலம் தான் அந்த காலத்தில் நிலத்தடி நீர் சேமித்தார்கள் . ஒவ்வொரு ஊரிலும் கோவில் மற்றும் குளம் , இதுதான் வாழ்க்கை முறையா இருந்தது. இதில் உள்ள விஞ்சானம் புரியாத தற்குறிகள் தான் பகுத்தறிவு பேசி நாட்டை நாசமாக்குகிறார்கள் .


chennai sivakumar
ஆக 20, 2024 14:33

இந்த வருடம் லெப்ட் ரைட் சென்டர் என்று வாங்க போகிறார் மர். வருன பகவான். அவன் அவன் துண்டை காணும் துணியை காணோம் என்று ஓடுவார்கள்


ஆரூர் ரங்
ஆக 20, 2024 12:35

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்ததற்கு ஸ்டெர்லைட்தான் காரணம்.


Ramesh Sargam
ஆக 20, 2024 12:26

இப்பொழுது மட்டும் ஏன் ஹிந்து கடவுள் வருண பகவான்? ஏன் மற்ற மத கடவுள்களை பிரார்த்திப்பதில்லை? மற்ற மத கடவுள்களால் மழை பொய்விக்கமுடியாதா? பொய்யை விற்கலாம். பொய்விக்கமுடியாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை