உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுமான தொழிலுக்கு ஜி எஸ் டி ஐ நீக்க வேண்டும்: பொன் குமார்

கட்டுமான தொழிலுக்கு ஜி எஸ் டி ஐ நீக்க வேண்டும்: பொன் குமார்

பெரம்பலுார்:பெரம்பலுாரில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டிகட்டுமானம் மனை தொழில் என்பது ஒரு நாட்டினுடைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கூடிய அத்தியாவசிய துறையாகும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய துறையாக உள்ளது. எனவே இந்தத் துறையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுக்கு உண்டு. எனவே தான் மத்தியிலும், மாநிலத்திலும் இந்தத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும். தனி அமைச்சர் தலைமையில் இந்த துறை செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை கட்டுமானம் மனை தொழில் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதைப்போல இந்த துறையை ஒரு இண்டஸ்ட்ரியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான முக்கியத்துவம் தரப்படும். இன்றைக்கு ஜி.எஸ்.டி., என்கிற கொடிய வரி மாநிலங்களை வரிய நிலைக்கு தள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டு வருகிறது. தங்கத்துக்கு 5 விழுக்காடு, வைரத்துக்கு 1.5% ஆனால் சிமெண்ட்க்கு 28 விழுக்காடு கட்டுமான தொழிலுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி., இதெல்லாம் அடியோடு நீக்க வேண்டும். கட்டுமான தொழிலுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். அல்லது 2 அல்லது 5 விழுக்காடு ஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். கட்டமைப்பு பணிகளை பொருளாதார வளர்ச்சிக்கு உதவிட முடியும். ஆனால் ஒன்றிய அரசு எதுக்கு வரி விதிக்க வேண்டும் எதற்கு வரியை தளர்த்தனும் என்று இல்லாமல் வரி வசூலில் உச்சத்தில் உள்ளனர். வரி வசூல் செய்யும் ஒன்றிய அரசு அதை மாநிலத்துக்கு கொடுப்பதில்லை.தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா திருப்பித் தருகின்றனர். ஆனால், உத்திர பிரதேசத்தில் ஒரு ரூபாய் கொடுத்தால் இரண்டு ரூபாய் 47 பைசா திருப்பித் தருகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கிற மக்கள் செலுத்தக்கூடிய வரிப்பணங்கள் உத்திர பிரதேச இருக்கும் ஹிந்திகாரர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தக் கூடிய ஒரு சிஸ்டம் இன்றைக்கு ஜிஎஸ்டியா இருக்கு. இது கொடூரமானது. ராமர் கோயிலுக்கு 1800 கோடி செலவு செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால் தமிழ்நாட்டில் வடபகுதியும் தென் பகுதியும் இயற்கை சீற்றத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. வெள்ளத்திலிருந்து மீண்டாலும் வாழ்க்கையில் இருந்து இன்னும் மீள முடியாமல் உள்ளனர். கரடியா இந்த அரசு கத்தி பார்த்ததும். முதல்வர், அமைச்சர் உதயநிதி பிரதமரை சந்தித்தனர் பாராளுமன்ற குழு பார்த்தது இதுவரையில் ஒத்த பைசா கொடுக்கவில்லை. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்