வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒரு காங்கிரஸ் தலைமை நிர்வாகியும் அஞ்சலி செலுத்த நேரடியாக செல்ல விரும்பவில்லை போலும்..
கொலை பின்னணியில் காங்கிரஸ் இருக்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது
மேலும் செய்திகள்
மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி
13-Feb-2025
சண்டிகர்: ஹரியானாவின் 22 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.ஹரியானாவின் ரோதக் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே சூட்கேஸில், ஒரு இளம் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். இது குறித்த போலீசார் நடத்திய விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் 22 வயது பெண் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் என்பது தெரியவந்தது. இது குறித்து ஹரியானா காங்கிரஸ் கட்சி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கட்சியின் நிர்வாகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். இந்த விஷயத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் பூபேந்திர ஹூடா வெளியிட்டுள்ள அறிக்கை:இளம் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் காட்டுமிராண்டித் தனமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஆன்மாவுக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலைமையை எடுத்துரைக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். கொலை உண்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி, கட்சித் தலைவர் ராகுல் நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள 33 நகராட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு காங்கிரஸ் தலைமை நிர்வாகியும் அஞ்சலி செலுத்த நேரடியாக செல்ல விரும்பவில்லை போலும்..
கொலை பின்னணியில் காங்கிரஸ் இருக்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது
13-Feb-2025