உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

விடுதலை சிறுத்தைக்கு வந்து விட்டதா வீரம்?

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் பெரியண்ணன் மனப்பான்மையில் நடந்துகொள்ளும். திமுக அரசின் திட்டங்கள், குறைகளை கூட்டணி கட்சிகள் கேள்வி கேட்காமல், ‛‛ஆமாம்'' போட வேண்டும் என்று எதிர்பார்க்கும். திமுக கூட்டணியில் எப்போதும் ‛‛துண்டு போட்டு'' வைத்திருக்கும் காங்கிரஸ். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், மதிமுக போன்றவையும் ‛‛ராஜ விசுவாசத்துடன்'' நடந்துகொள்வர். ஆனால் இம்முறை மட்டும் கூட்டணி கட்சிகளில் வி.சி.,க்கு மட்டும் கொஞ்சம் வீரம் வந்துள்ளது போல. அவ்வப்போது ஏதாவது ஒரு வெடியை கொளுத்திப் போட்டுக்கொண்டு இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nxljrons&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிர்ச்சி வைத்தியங்கள்

-----------------------

வைத்தியம் 1:

தாங்கள் நடத்திய மது ஒழிப்பு மாநாடுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவையும் அழைத்து திமுகவுக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது வி.சி.,

வைத்தியம் 2:

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி திமுக அரசின் அடிமடியில் கை வைத்தது..

வைத்தியம் 3:

தங்கள் கட்சியின் து.பொ.செ., ஆதவ் அர்ஜூன் மூலம், ‛‛ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு தர வேண்டும்'' என்று சொல்லச் சொல்லி இன்னொரு பட்டாசை வீசியது வி.சி.,

வைத்தியம் 4:

கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை என திருமாவளவன் கூறிய பிறகும், கோவை தம்பிகள், ‛‛ஆட்சியில் பங்கு வேண்டும்'' என்று கேட்டு போஸ்டர்களை ஒட்டி, திமுகவை ‛‛ஜெர்க்' ' ஆக்கினர்.

வைத்தியம் 5:

நடந்து முடிந்த சென்னை வான் சாகசத்தில் 5 பேர் இறந்ததற்கு திமுக அரசை திருமாவே கண்டித்துள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என விசாரித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.அதாவது, திமுக அரசின் முன்னேற்பாடு நடவடிக்கைகள் சரியில்லை என்பதை நேரடியாக சொல்லாமல், கொஞ்சம் பூசி மெழுகி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அர்த்தம் எல்லாம் ஒன்று தான்.திருமா மட்டும் அல்ல, அவரது கட்சி து.பொ.செ., ஆதவ் அர்ஜூனும், ‛‛மாநில அரசின் கவனக்குறைவால் சாகசம் சாதனையாக அல்லாமல் வேதனையாகிவிட்டது'' என்று கூறியுள்ளார்.(துாத்துக்குடி எம்.பி., கனிமொழியும் வான் சாகச நிகழ்ச்சி ஏற்பாட்டில் செய்யப்பட்ட சொதப்பல்களுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்)ஆக, திமுகவின் மிகவும் நம்பிக்கையான கூட்டாளி என்று இதுவரை கருதப்பட்ட ‛‛சிறுத்தைகளுக்கு'' இப்போது தான் வால் ஆட ஆரம்பித்துள்ளன. விரைவில் தலையும் ஆடும். இப்போதாவது திருமாவளவன் உண்மையை பேசி உள்ளாரே'' என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 21:44

சிறுத்தை கழுத்தில் பெல்ட், அதில் சங்கிலி கோர்த்து இப்போ பிஜேபி ஆபீஸ் வாசலில் வாட்ச்மேன் பக்கத்தில் தயிர் சோறு தின்று விட்டு படுத்துக் கிடக்கிறது. அவர் சூ சூ ன்னா குக்குது


Ramesh Sargam
அக் 07, 2024 21:04

மேற்கூறிய வைத்தியங்கள் எல்லாம் அடுத்த தேர்தலுக்கு முன்பு திமுக சரிக்கட்டிவிடும். ஆம், திமுக செய்யும் ஒரே வைத்தியம் அப்பொழுது - கூட்டணியில் உள்ளவர்களுக்கு பணமுடிச்சு. பணத்தை வீசி எரிந்து கூட்டணியில் உள்ளவர்கள் வாயை அடைத்து வைத்தியம் செய்துவிடுவார்கள் இந்த தில்லாலங்கடி திமுக வைத்தியர்கள்.


R.MURALIKRISHNAN
அக் 07, 2024 19:13

இந்த வைத்தியம் பொட்டி பணம் கொடுத்தா சரியாயிடும். வீரமாவது மண்ணாவது .


lana
அக் 07, 2024 18:44

கூட ரெண்டு பொற தூக்கி போட்டா முடிந்தது. இதுக்கு போய் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல கூடாது. அதான் கோவம் வராது ன்னு வடிவேலு பாணியில் சொல்லி விட்டார்.


duruvasar
அக் 07, 2024 17:45

இந்த சிறுதைகளிடம் இருபது வெறும் கரும்புள்ளிகள் மட்டுமே .


தினகரன்,தாம்பரம்
அக் 07, 2024 19:09

சிறுத்தைகளின் மியாவ் மீசையும் வாலும் ஒட்ட நறுக்கப் படும்.


Shekar
அக் 07, 2024 17:40

இதெல்லாம் நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழு என்று செட் அப். அப்பதான், துணை முதல்வர் விமர்சனம், நாட்டில் நடக்கிற கஞ்சா, பாலியல் அத்துமீறல்கள், மற்றும் ஆட்சியின் அவலங்களை மறந்து மக்கள் இவர்கள் நாடகத்தை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.


Jysenn
அக் 07, 2024 17:25

.....Cheetahs.


venugopal s
அக் 07, 2024 17:18

ம்ஹூம், சரியாகப் பற்றவில்லை, உங்களுக்கு சரியாகப் பற்ற வைக்கவே தெரியவில்லை !


sankaranarayanan
அக் 07, 2024 17:17

மானாட மயிலாட என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இப்போது அரசியலில் சிறுத்தைகளுக்கு இப்போது தான் வால் ஆட ஆரம்பித்துள்ளன. விரைவில் தலையும் ஆடும். இப்போதாவது திருமாவளவன் உண்மையை பேசி உள்ளாரே என்று மக்களே பேசிக்கொள்கிறார்கள்


Ohhm Prakash
அக் 07, 2024 17:00

கம்யூனிஸ்ட்கள் போல காணாமல் போகாமல் இருக்க, தங்கள் இருப்பை பறைசாற்றிக்கொள்ளும் ஒரு நாடகமாகவே பார்த்துக்கொள்ளப்பட வேண்டுமே அன்றி, வேறு எதுவும் உட்பொருளோ, உள்நோக்கமோ சிறுத்தைகளுக்கு இருக்காது என்றே தோணுகிறது..


முக்கிய வீடியோ