உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளை குடைக்கு வேலை வந்து விட்டதோ

வெள்ளை குடைக்கு வேலை வந்து விட்டதோ

சென்னை: நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்லவுள்ள நிலையில், 'வெள்ளை குடைக்கு வேலை வந்து விட்டதோ' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.

அவரது அறிக்கை:

'மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதால், நிடி ஆயோக் கூட்டத்தை, நான் புறக்கணிக்கிறேன்' என, வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் முதல்வர் ஸ்டாலின், தற்போது நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க, டில்லிக்கு பறக்கிறாராம்.தமிழக மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார். அன்று, '2ஜி'க்காக அப்பா டில்லி சென்றார். இன்று, 'டாஸ்மாக்' தியாகி, தம்பி... வெள்ளைக்குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் 'தம்பி' படுத்தும் பாடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை