உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிக்கை

நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிக்கை

சென்னை: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (டிச.,10) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.,09) அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j5jgcx1o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.,11ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (டிச.,10) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.டிச.,12ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை