| ADDED : செப் 16, 2025 01:59 PM
சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 16) 10 மாவட்டங்களிலும், நாளை (செப் 17) 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று (செப் 16) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ஈரோடு,* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருவண்ணாமலை* திருப்பத்தூர்* வேலூர்* செங்கல்பட்டு* விழுப்புரம்* கள்ளக்குறிச்சிநாளை (செப் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* மயிலாடுதுறை* நாகப்பட்டினம்* தஞ்சாவூர்* திருவாரூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* திருச்சி* மதுரை* தேனி* திண்டுக்கல்* தர்மபுரி* சேலம்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* செங்கல்பட்டு* நீலகிரி* ஈரோடு* கிருஷ்ணகிரி* காஞ்சிபுரம்செப் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* சேலம்* கள்ளக்குறிச்சி* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருவண்ணாமலை* திருப்பத்தூர்* வேலூர்* கள்ளக்குறிச்சி* செங்கல்பட்டுசெப்டம்பர் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* ராணிப்பேட்டை* வேலூர்* காஞ்சிபுரம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.