உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடரும் கனமழை; மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தொடரும் கனமழை; மஹாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.மும்பையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், அந்த நகரமே வெள்ளக் காடானது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, ரயில், விமான சேவையும் முடங்கியது. மஹாராஷ்டிராவில், 35 ஆண்டுகளுக்கு பின், பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளது. தலைநகர் மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கிய கனமழை, விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. இந்நிலையில், மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (மே 27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.ராய்காட், புனே, பீட், ஹிங்கோலி, நான்டெட் மற்றும் பர்பானி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பை, தானே, ஜல்கான், நாசிக், அஹில்யாநகர், சாங்லி, ஜல்னா மற்றும் மகாராஷ்டிராவின் பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் இருந்த மரங்கள் வேரோடு முறிந்து விழுந்த நிலையில், மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்தன. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பையில் உள்ள குர்லா, சியோன், தாதர், பரேல் ஆகிய பகுதிகள், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pmnr Pmnr
மே 27, 2025 16:05

மும்பை மாநகரம் தத்தளிக்கிறதா?


deva
மே 27, 2025 11:53

அப்போ மும்பை மக்கள் கார் ஓட செத்து ஒரு வீட்டுக்கு ஒரு boat வாங்கிருங்கா


துர்வேஷ் சகாதேவன்
மே 27, 2025 08:24

என்னடா இது டபுள் என்ஜின் சர்க்காருக்கு வந்த சோதனை , இப்ப தான் ஸ்மார்ட் சிட்டி என்று 10000 கோடி செலவு செய்து , இதை எவனையும் கேட்க மாட்டான் இந்த சைடு வரவே மாட்டாங்கள்


மீனவ நண்பன்
மே 27, 2025 09:13

தெருவில் பன்னி சென்றால் யாரும் கிட்ட போகமாட்டாங்க ....


N Sasikumar Yadhav
மே 27, 2025 09:23

உங்க எஜமான் கோபாலபுர குடும்ப ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா . உங்க திராவிட எஜமானின் சாராய ஆறும் கள்ளச்சாராய ஆறும்தான் ஓடுகிறது . இயற்கை செயலுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது உன்னுடைய மானங்கெட்ட துர்வறிவுக்கு எட்டவில்லையா


r ravichandran
மே 27, 2025 12:38

நம்ம சென்னை போல ஒரு சிறு மழை பெய்தால் கூட ஒரு மாதத்திற்கு தண்ணீர் தேங்கும் நிலை அங்கு இல்லை. அங்கு எவ்வளவு மழை பெய்தாலும் இரண்டே நாளில் தண்ணீர் வெளியேற வடிகால் வசதிகள் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை