உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரியில் நாளை கனமழை

கோவை, நீலகிரியில் நாளை கனமழை

சென்னை: 'கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை முதல் கனமழை துவங்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை:தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை வளசரவாக்கம், ஐஸ் ஹவுஸ், நெற்குன்றம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில், தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் நாளை முதல் கனமழை துவங்க வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில், வரும் 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. மதுரை விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை