உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை

ஆறு மாவட்டங்களில் நாளை முதல் கனமழை

சென்னை:'வளிமண்டல சுழற்சி உள்ளி ட்ட காரணங்களால் , தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில், நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும் நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 28 வரை, தமிழகத் தில் சில இடங்களில் மிதமான மழை தொடரலாம். கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில், நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சில இடங்களில் இடி, மின்னலுடன் இன்று லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ