உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நல்லது பண்ணும் எண்ணமே இல்லை; தி.மு.க., அ.தி.மு.க., மீது ஐகோர்ட் அதிருப்தி

நல்லது பண்ணும் எண்ணமே இல்லை; தி.மு.க., அ.தி.மு.க., மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி செல்லூர் ராஜூ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீது நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தி.மு.க., அ.தி.மு.க.,வினர் மாறி மாறி குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள், நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை. தங்களை இருப்பு வைக்கவே முயற்சிக்கிறார்கள். இரு கட்சிகளுக்குமே மக்கள் மீது அக்கறையில்லை. சொந்த கட்சி நலன் பற்றி மட்டுமே அக்கறைபடுகின்றன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகக் கூறி ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர், என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Smba
நவ 15, 2024 15:19

சரி அப்ப மூணாவதா பி. சே. பிக்கு இருக்கு துணு அரசர் என்னமோ


Rajamani K
நவ 15, 2024 17:56

அதில் தவறில்லை. உங்கள் போன்றவர்களுக்குத்தான் திறன் இல்லை. டாஸ்மாக், இலவசம் இவற்றால் தமிழகம் அசிங்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களை திராவிடக் கழகங்க. ஏமாற்றுகின்றன.


ஆரூர் ரங்
நவ 15, 2024 15:06

ஆனாலும் அவர்களுக்குத்தான் வாக்கு விழும். பாடப்புத்தகங்கள் முதல் ஊடகங்கள் வரை திராவிஷ பொய்யைப் பரப்பி மூன்று தலைமுறைகளை மூளைச்சலவை செய்து விட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 15:01

ரெண்டும் வேஸ்ட் .... இதை காமராஜர் அன்றே உணர்ந்திருந்தார் .......


அசோகன்
நவ 15, 2024 14:49

பிஜேபி இதை மக்களிடம் கொண்டுச்செல்வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை