உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க; நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.ப்ரோ கோட் என்ற புதிய படத்தில் நடிப்பதற்காக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நடிகர் ரவி மோகனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தது.80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை நிறுவனம் தொடங்கவில்லை. கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 9 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ரவி மோகன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்டு யுனிவர்சல் சார்பில், நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. 'இந்த பிரச்னையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது. இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும்' என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, 'ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

உ.பி
ஜூலை 24, 2025 03:24

ஜெயம் ரவி


ஆரூர் ரங்
ஜூலை 23, 2025 22:11

குறிபிட்ட தேதிகளில் நடித்துக் கொடுக்கதான் அட்வான்ஸ் பெற்றார். அந்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தாதது தயாரிப்பாளர் தரப்பின் குற்றம். இதனால் வேறு பட வாய்ப்புகளையும் இழந்திருப்பார்.


GMM
ஜூலை 23, 2025 19:53

இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை இருவரும் கேட்காத போது ஏன் நியமித்து கோர்ட் உத்தரவிட்டது. ?நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணம் கைமாறிவிடும்.? பட தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு தொகை கூறலாம். பெறுவது வேறு நபர். மன்றத்தில் யாரும் நுழைய முடியாது. எங்கள் குடும்ப அனுபவம். கையெழுத்து போட பேனா கொடுத்து வாங்கி விடுவர் . ஒரு பைசா கிடைக்காது. ஒரு அடி நிலம் கிடைக்காது. சாட்சி காலில் விழுவது தவிர்த்து, சண்டைக்காரர் காலில் விழுவது மேல்.


suresh Sridharan
ஜூலை 23, 2025 19:06

மத்தியஸ்தம் செய்ய ஆட்கள் கோர்ட்டு சொல்லும் வார்த்தைகள் அப்படி என்றால் புரோக்கர் வைத்துக் கொள்ளுங்கள்


visu
ஜூலை 23, 2025 17:51

ஜெயம் ரவி சொல்லும் கருத்து நியாயமானது அவர் திருப்பி தரமாட்டேன் என்று சொல்லவில்லை .நிறுவனம் கொடுத்த கால் சீட் பயன்படுத்தவில்லை நான் வேறு படம் நடிக்கவில்லை அந்த கால் சீட் வீணாக்கப்பட்டது அந்த பணத்தை அடுத்த படம் புக் ஆகும்போது திருப்பி தருகிறேன் என்கிறார்


Geetha S
ஜூலை 23, 2025 17:17

பெண்பாவம் பொல்லாதது


சின்னப்பா
ஜூலை 23, 2025 17:14

விவாகரத்து ஏன் என்று புரிகிறது!


முக்கிய வீடியோ